பிரபல நடிகையை திருமணம் செய்ய போகும் நடிகர்!.. அஜித்துடன் திடீர் சந்திப்பு.. செம வைரல் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐத்ராபாத்: AK 61 படத்தின் படப்பிடிப்புக்கு நடுவே நடிகர் அஜித்தை பிரபல நடிகர் சந்தித்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

Warriorr movie villain aadhi pinisetty meet actor Ajithkumar AK61 at Hyderabad

Also Read | DON FDFS.. தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த சிவகார்த்திகேயன்! செம வைரல் வீடியோ.. FANS HAPPY

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது.

வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Warriorr movie villain aadhi pinisetty meet actor Ajithkumar AK61 at Hyderabad

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

Warriorr movie villain aadhi pinisetty meet actor Ajithkumar AK61 at Hyderabad

AK 61 படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது. AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார்.

AK61 படத்தின் பூஜை ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்ற உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைகிறார். ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் AK 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Warriorr movie villain aadhi pinisetty meet actor Ajithkumar AK61 at Hyderabad

இந்நிலையில் ஆந்திராவைச் சார்ந்தபிரபல நடிகர் ஆதி பினிச்செட்டி, நடிகர் அஜித்தை சந்தித்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன. தமிழில், மிருகம், ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். கடைசியாக, அவரது நடிப்பில் உருவாகி இருந்த 'கிளாப்' திரைப்படம், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. தற்போது இவர் வாரியர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

AK61 படத்தில் ஆதி நடிப்பது குறித்த  அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையே விரைவில் நடிகை நிக்கி கல்ராணியை ஆதி திருமணம் செய்ய இருக்கிறார்.

Warriorr movie villain aadhi pinisetty meet actor Ajithkumar AK61 at Hyderabad

நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து, மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 24 ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயம் ஆனது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

பிரபல நடிகையை திருமணம் செய்ய போகும் நடிகர்!.. அஜித்துடன் திடீர் சந்திப்பு.. செம வைரல் ஃபோட்டோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Warriorr movie villain aadhi pinisetty meet actor Ajithkumar AK61 at Hyderabad

People looking for online information on Ajithkumar, AK61, Warriorr movie, Warriorr movie villain aadhi pinisetty will find this news story useful.