மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிட்டான ‘SVP’… பிரபல ஓடிடியில்… ரிலீஸ் தேதி Update

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு நடித்துள்ள சர்காரு வாரி பாட்டா திரைப்படம் கடந்த மாதம் (மே 12) ஆம் தேதி ரிலீஸானது.

Mahesh babu keerthy suresh SVP ott streaming date

Also Read | “குட்டிப் பாப்பா வரப்போகுது”… “என்ன சொல்றீங்க…?” – வைரலாகும் R J பாலாஜியின் Prank வீடியோ

சர்காரு வாரிபட்டா…

மகேஷ் பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான சர்காரு வாரிபாட்டா படத்தை பரசுராம் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் சங்கராந்திக்கு வெளியாவதாக இருந்த நிலையில், தள்ளிவைக்கப்பட்டு கடந்த மே மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். தமன் மகேஷ் பாபு கூட்டணியில் ஏற்கனவே உருவான படங்களின் வெற்றியால் இந்த படத்துக்கு எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு நிலவியது. படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

Mahesh babu keerthy suresh SVP ott streaming date

கதைக்களம்…

'சர்க்காரு வாரி பட்டா', படத்தின் மையக் கதை பண மோசடி உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக  ஹீரோ களமிறங்கி ஆக்ஷனில் இறங்குவதை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இப்படம் உலகளவில் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மகேஷ் பாபுவுக்கு இது தொடர்ந்து நான்காவது 100 கோடி+ ஷேர் கொடுத்த திரைப்படம் ஆகும். பரபரப்பாக திரையரங்குகளில் ஓடி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி ரசிகர்களால் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டது.

Mahesh babu keerthy suresh SVP ott streaming date

ஓடிடி ரிலீஸ்…

இந்நிலையில் தற்போது ‘சர்காரு வாரிபட்டா’ திரைப்படம் வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | BGM 8: “கார் வாங்கணும்னா முதல்ல வீடு வாங்கனும்…” மேடையில் கலக்கிய ‘ஜெய்பீம்’ மணிகண்டன்

தொடர்புடைய இணைப்புகள்

Mahesh babu keerthy suresh SVP ott streaming date

People looking for online information on Keerthy Suresh, Mahesh Babu, Sarkaru Vaari Paata, SVP will find this news story useful.