AK 61 ஷூட்டிங்.. ஹோட்டல் ஊழியர்களுக்கு கேக் ஊட்டி விட்ட அஜித்! நெகிழ்ந்து போன நிர்வாகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

AK 61 Movie Ajithkumar Cake Cutting Ceremony at Sheraton Hotel

Also Read | ‘Queen 2’ ஷூட்டிங்கில் ரம்யா கிருஷ்ணனோடு பிரபல நடிகை… வைரலாகும் BTS pics

வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

AK61 படத்தின் பூஜை கடந்த மாதம் ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில்  நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்றுகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். இந்த படத்தில் நடிகை மெர்சி சித்ரா நடிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார்.

AK 61 Movie Ajithkumar Cake Cutting Ceremony at Sheraton Hotel

AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் நடிகர் அஜித் தங்கியிருந்த ஐத்ராபாத் ஷெரேட்டன் ஹோட்டல் நிர்வாகம் அஜித்திற்கு பிரியாவிடை அளித்துள்ளது.

அஜித் புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக கேக் வெட்டி ஹோட்டல் நிர்வாகம் உபசரித்துள்ளது, மேலும் அஜித் குமார், ஹோட்டல் ஊழியர்களுக்கு கேக் ஊட்டி விட்ட புகைப்படங்களை வெளியிட்டு ஹோட்டல் நிர்வாகம் நெகிழ்ச்சியான பதிவையும் பதிவிட்டுள்ளது.

AK 61 Movie Ajithkumar Cake Cutting Ceremony at Sheraton Hotel

அந்த பதிவில், "எளிமையான கோலிவுட் சூப்பர் ஸ்டார் தல அஜித்திற்கு சேவை செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரின் மற்றொரு வசதியான தங்குதலுக்காக அவரை மீண்டும் ஹோஸ்ட் செய்ய நாங்கள் (ஹோட்டல் நிர்வாகம்) எதிர்நோக்குகிறோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AK 61 Movie Ajithkumar Cake Cutting Ceremony at Sheraton Hotel

AK61 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புனேயில் இன்று ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்குகிறது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | டி.இமான் வெளியிட்ட அசோக் செல்வனின் ‘வேழம்’ திரைப்படத்தின் ரொமாண்டிக் பாடல்..!

AK 61 ஷூட்டிங்.. ஹோட்டல் ஊழியர்களுக்கு கேக் ஊட்டி விட்ட அஜித்! நெகிழ்ந்து போன நிர்வாகம் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

AK 61 Movie Ajithkumar Cake Cutting Ceremony at Sheraton Hotel

People looking for online information on Ajith Kumar, Ajithkumar Cake Cutting Ceremony, AK 61, AK 61 Movie, Sheraton Hotel will find this news story useful.