www.garudabazaar.com

ஹைதராபாத்தில் அஜித்... "ரசிகரோடா இவ்ளோ இயல்பா இருக்காரே?" .. நெகிழும் ரசிகர்கள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது.

Actor Ajithkumar at Hyderabad Airport with his fans

ஜெய் நடிப்பில் மிரட்டலான த்ரில்லர்….. வைரலாகும் ’பட்டாம்பூச்சி’ motion poster!

வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்க உள்ளது. AK61 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Actor Ajithkumar at Hyderabad Airport with his fans

AK 61படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது. AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் AK61 பட கெட்டப்புடன் அஜித் தனது ரசிகர்களுடன் விமான நிலையத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Actor Ajithkumar at Hyderabad Airport with his fans

ஐதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன. கோட் சூட்டில் அஜித் குமார் செம்ம தோரணையாக உள்ளார்.

Actor Ajithkumar at Hyderabad Airport with his fans

AK61 படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனிருத் இசையமைக்க, லைக்கா நிறுவனம் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் படம் வெள்ளித்திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Ajithkumar at Hyderabad Airport with his fans

கடுமையான உடற்பயிற்சியோடு ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! முழு தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajithkumar at Hyderabad Airport with his fans

People looking for online information on Ajith Kumar, Ajithkumar at Hyderabad Airport, AK61, Boney kapoor, Hyderabad Airport, Valimai will find this news story useful.