திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த இயக்குனர் ஷங்கர்.. இதான் காரணமா? பின்னணி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர் & சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Director Shankar meet Super Star Rajinikanth 15 Years Of Shivaji

Also Read | தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம்.. ரிலீஸ் எப்போ? புது போஸ்டருடன் வெளியான மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவாஜி, எந்திரன், 2.0 படங்களை இயக்கியவர் ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனர் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.

சிவாஜி

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவாஜி. ரஜினி, ஷ்ரியா, விவேக், மணிவண்ணன் என்று நட்சத்திர மட்டாளமே நடித்திருந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

Director Shankar meet Super Star Rajinikanth 15 Years Of Shivaji

இப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 15 வருடங்கள் ஆவதை முன்னிட்டு இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு " இந்த மறக்கமுடியாத நாளில் நமது சிவாஜியின் பாஸ் ரஜினிகாந்த் அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி!" என இயக்குனர் ஷங்கர் பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் ஷங்கரின் மகளும் நடிகையுமான அதீதி ஷங்கர் உடன் இருந்தார்.

Director Shankar meet Super Star Rajinikanth 15 Years Of Shivaji

ரஜினிகாந்த்

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்க உள்ளது.

ஷங்கர்

அதே போல் இயக்குனர் ஷங்கர், தற்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பணியாற்ற ஒப்பந்தமாகி உள்ளார்.  ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தை  இயக்கி வருகிறார்.

இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

Director Shankar meet Super Star Rajinikanth 15 Years Of Shivaji

இந்த படத்தின் துவக்க விழா செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்று வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் சிலநாட்களுக்கு முன் துவங்கியுள்ளது.

Director Shankar meet Super Star Rajinikanth 15 Years Of Shivaji

Also Read | வாங்க FRIEND கல்யாணத்துக்கு போவோம்.. செம வைரலாகும் கீர்த்தி சுரேஷின் PHOTOSHOOT!

தொடர்புடைய இணைப்புகள்

Director Shankar meet Super Star Rajinikanth 15 Years Of Shivaji

People looking for online information on 15 Years Of Shivaji, Director shankar, Super Star, Super Star Rajinikanth, X will find this news story useful.