777 Charlie Trailer

BREAKING: சிவகார்த்திகேயன் & மடோன் அஸ்வின் படத்தின் ஷூட்டிங் எப்போ? வெளியானExclusive தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கும் படத்தைப் பற்றி பிரத்யேகமான தகவல் வெளியாகியுள்ளது.

Sivakarthikeyan Madonne ashwin movie Exclusive shooting update

Also Read | பிரபல திரையரங்கில் ‘பாகுபலி 2’ படைத்த சாதனை… முறியடித்து மாஸ் காட்டிய ‘விக்ரம்’

சிவகார்த்திகேயன்…

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டான்’ திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்த நிலையில் உலகம் முழுவதும் திரையரங்குகள் மூலமாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது.

Sivakarthikeyan Madonne ashwin movie Exclusive shooting update

பிரின்ஸ்…

டான் படத்துக்கு பின், ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாகி வரும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ், Sri Venkateshwara Cinemas LLP, Suresh Productions இந்த புதிய சிவகார்த்திக்கேயன் படத்தை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

Sivakarthikeyan Madonne ashwin movie Exclusive shooting update

இந்த படத்தில் நடிகர் பிரேம்ஜி அமரன் வில்லனாக நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை  மரியா ரியாபோஷாப்கா நடிக்கிறார். பிரின்ஸ் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு மற்றும் போஸ்டர்கள்  வெளியாகி கவனம் பெற்றன.

SK 21…

இதையடுத்து மண்டேலா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் அந்த படத்தின் ப்ரோமோ ஷூட் நேற்று சென்னை எண்ணூரில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதிகாரப்பூர்வமான ஷூட்டிங் ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Sivakarthikeyan Madonne ashwin movie Exclusive shooting update

மேலும் இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் அருண் விஸ்வா தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அருண் விஸ்வா தற்போது உருவாகி வரும் ‘பிரின்ஸ்’ படத்தின்தில் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்கமல் சிவகார்த்திகேயன் கூட்டணி…

இதையடுத்து சிவகார்த்திகேயன் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

Also Read | திருமணம் முடிந்ததும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் சென்றது எங்கு தெரியுமா? Viral pics

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan Madonne ashwin movie Exclusive shooting update

People looking for online information on Sivakarthikeyan, Sk 20 Movie, SK 20 Movie updates will find this news story useful.