777 Charlie Trailer

கிராமத்து தென்றலாக பிரியா பவானி சங்கர்.. திருச்சிற்றம்பலம் படத்தின் அசத்தலான புதிய MOTION POSTER!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் பிரியா பவானி சங்கரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Thiruchitrambalam Movie Priya Bhavani Shankar First Look Poster Released

சிவகார்த்திகேயன் நடிக்கும் PRINCE..முதல் முறையாக ஆடியோ உரிமையை கைப்பற்றிய இந்திய நிறுவனம்!

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Thiruchitrambalam Movie Priya Bhavani Shankar First Look Poster Released

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது. பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பை படக்குழு நடத்தினர். கடந்த ஏப்ரல் மாதம் இந்த படத்தின் பேட்ச் ஒர்க் படப்பிடிப்பின் போது நடிகர் தனுஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் எடுத்த BTS புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. மேட் தொழில் நுட்பத்தில் கார் சாலையில் செல்லும் காட்சிகள் எடுக்கப்பட்டன.

Thiruchitrambalam Movie Priya Bhavani Shankar First Look Poster Released

படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், திருச்சிற்றம்பலம் படத்தின் பிரியா பவானி சங்கரின் புதிய கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளது. ரஞ்சனி எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். கிராமத்து தென்றல் எனும் தலைப்புடன் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. விரைவில் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Also Read | ஹிர்த்திக் ரோஷன் நடிக்கும் விக்ரம் வேதா இந்தி ரீமேக்.. ரிலீஸ் எப்போ? வெளியான மாஸ் BTS போட்டோ!

 

தொடர்புடைய இணைப்புகள்

Thiruchitrambalam Movie Priya Bhavani Shankar First Look Poster Released

People looking for online information on Dhanush, Priya Bhavani Shankar, Thiruchitrambalam Movie will find this news story useful.