H. வினோத் இயக்க அஜித் நடிக்கும் AK61 படத்தில் இந்த KGF நடிகர் இருக்காரா? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

is the actor John Kokken part of Ajith Kumar AK61 Movie

Also Read | DON: அஜித்தின் 'வாலி' Reference.. அதகளம் செய்த SK - SJ சூர்யா! தியேட்டர்ல சும்மா தாறுமாறு மொமண்ட்

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

AK 61 படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது. AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார்.

is the actor John Kokken part of Ajith Kumar AK61 Movie

AK61 படத்தின் பூஜை ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்ற உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைகிறார். ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் AK 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

is the actor John Kokken part of Ajith Kumar AK61 Movie

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜான் கொக்கென். இவர் அஜித்துடன் 'வீரம்' படத்தில் தமன்னாவை கொல்ல வரும் கூலிப்படை தலைவனாக நடித்திருப்பார். தற்போது  ’கப்ஜா’ என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். ' கே.ஜி.எஃப்- 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். கே.ஜி.எஃப் முதல் பாகத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது டிவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

is the actor John Kokken part of Ajith Kumar AK61 Movie

அதில், "நான் பணிபுரியும் தற்போதைய படம் குறித்து  நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ரொம்ப நாளா இப்படி நடக்க வேண்டிக்கிட்டு இருந்தேன். இதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்" என கூறினார். ஆனால் அது எந்த படம் என்று அவர் குறிப்பிடவில்லை.

is the actor John Kokken part of Ajith Kumar AK61 Movie

இச்சூழலில் அஜித் ரசிகர் ஒருவர், "AK 61 படம் என  போட்டுவிடுங்க" என பதிவிட அதனை ஜான் லைக் செய்துள்ளார்.

ஜான் கொக்கன் AK 61 படத்தில் பணிபுரிவது பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

is the actor John Kokken part of Ajith Kumar AK61 Movie

People looking for online information on Ajith Kumar AK61 Movie, Ajithkumar, AK 61, John Kokken will find this news story useful.