அஜித் - ககன் சந்திப்பு.. AK பற்றி இந்திய ஒலிம்பிக் பயிற்சியாளர் சொன்ன வார்த்தை தான் இப்போ TREND!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான  அஜித் குமார் தற்போது AK 61 படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் .

Olymbic Coach Joydeep Gagan Narang about Ajith Kumar

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சினிமா மட்டுமல்லாமல் கார் ரேசிங், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர், துப்பாக்கி சுடுதல் வீரர் என பன்முகத்திறமை வாய்ந்தவர் அஜித்.

Olymbic Coach Joydeep Gagan Narang about Ajith Kumar

கடைசியாக நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வலிமை படத்தின் வெற்றிக்கு பின், AK61 படத்தின் பூஜை கடந்த மாதம் ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்ற உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைகிறார்.

Olymbic Coach Joydeep Gagan Narang about Ajith Kumar

ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் AK 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் - ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங்கை சந்தித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களை ககன் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். இதற்கு இந்திய ஒலிம்பிக் அணி பயிற்சியாளர் ஜாய்தீப் கர்மாகர் "Love this Guy" கமெண்ட் செய்துள்ளதும் வைரலாகி வருகிறது. 

Olymbic Coach Joydeep Gagan Narang about Ajith Kumar

தொடர்புடைய இணைப்புகள்

Olymbic Coach Joydeep Gagan Narang about Ajith Kumar

People looking for online information on Ajith Kumar, Gagan Narang, Joydeep Karmakar will find this news story useful.