கமல் நடித்த 'விக்ரம்' படம்.. கண்டு ரசித்த அஜித் குடும்பத்தினர்! செம்ம வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல் நடித்த விக்ரம் படத்தை அஜித் குடும்பத்தினர் கண்டுகளித்துள்ளனர்.

Actor Ajith Kumar Family watched Vikram Movie Special Show

‘விக்ரம்’ திரைப்படம் நேற்று (06.03.2022) உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

Actor Ajith Kumar Family watched Vikram Movie Special Show

கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

Actor Ajith Kumar Family watched Vikram Movie Special Show

இப்படத்தில் கமல் கர்ணன் & விக்ரம் என்ற இரு பெயரிலும் நடித்துள்ளார். விஜய் சேதுபதி 'டாக்டர் சந்தனம்' எனும் பெயரிலும் , பஹத் பாசில் 'அமர்' எனும் பெயரிலும் நடித்துள்ளனர். சூர்யா 'ரோலக்ஸ்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி குமாரும், மகள் அனோஸ்கா குமாரும் 'விக்ரம்' படத்தினை சிறப்புக்காட்சியில் பார்த்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Ajith Kumar Family watched Vikram Movie Special Show

நடிகை குஷ்பு, சினேகன், கனிகா சினேகன், கமல்ஹாசன், சந்தான பாரதி, உதயநிதி ஸ்டாலின், ராதிகா, காயத்ரி, ஸ்வதிஸ்டா, இர்பான், ஆரி, ஐசரி கணேஷ்,  ஆகியோரும் இந்த சிறப்புக்காட்சிக்கு வந்திருந்தனர். 

கமல் நடித்த 'விக்ரம்' படம்.. கண்டு ரசித்த அஜித் குடும்பத்தினர்! செம்ம வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actor Ajith Kumar Family watched Vikram Movie Special Show

People looking for online information on Ajith Kumar, Anoushka Ajith, Kamal, Shalini, Vikram will find this news story useful.