செம வைரலாகும் நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்.. பகிர்ந்த சுரேஷ் சந்திரா! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான  அஜித் குமார் தற்போது AK 61 படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் .

Ajith Kumar Whatsup status shared by Suresh Chandra

Also Read | "Fun நானி, Cute நஸ்ரியா.." அடடே சுந்தரா படத்தின் டிரைலர் எப்போ?.. Glimpse வீடியோவுடன் வெளியான 'Update'

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. பல இளைஞர்களுக்கு நடிகர் அஜித் ஆதர்ச நாயகனாக இருக்கிறார். சமூக வலைதளங்களான பேஸ்புக்,டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்குகள் எதுவும் இவருக்கு கிடையாது. சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இன்று வரை இருந்து வருகிறார். ரசிகர்களின் ரசிகர் மன்ற கணக்குகளே சமூக வலைதளங்களில் இருந்து வருகின்றன.

Ajith Kumar Whatsup status shared by Suresh Chandra

கடைசியாக நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது. வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajith Kumar Whatsup status shared by Suresh Chandra

வலிமை படத்தின் வெற்றிக்கு பின், AK61 படத்தின் பூஜை கடந்த மாதம் ஏப்ரல் 11 அன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த AK 61 படத்தில் ஒளிப்பதிவாளராக நிரவ் ஷா பணியாற்ற உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை, படங்களை அடுத்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் - எச். வினோத் உடன் இணைகிறார்.

Ajith Kumar Whatsup status shared by Suresh Chandra

ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் AK 61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அஜித்குமாரின் வாட்ஸ் அப் ஸ்டேட்டசை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், கழுதை மீது இரு தம்பதியினர் பயணிக்கும் போது ஊரார்கள் பேசும் விமர்சனத்துக்கு ஏற்றவாறு ஒவ்வொரு முறையும் மாற்றிக்கொண்டே இருந்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய மீமாக அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் அமைந்துள்ளது.

Ajith Kumar Whatsup status shared by Suresh Chandra

இந்த டிவீட் தற்போது செம வைரலாகி வருகிறது. இந்த மீமின் கருதுகோளாக "நீங்கள் நம்புவதை செய்யுங்கள், விமர்சனத்தினால் கவனத்தை சிதறவிடாதீர்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | அடடே.. செம மாஸ் சம்பவம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்.‌. வேற லெவல் இது..!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Whatsup status shared by Suresh Chandra

People looking for online information on Ajith Kumar, Suresh Chandra, Whatsup status will find this news story useful.