777 Charlie Trailer

பிரபல திரையரங்கில் ‘பாகுபலி 2’ படைத்த சாதனை… முறியடித்து மாஸ் காட்டிய ‘விக்ரம்’

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னையின் பிரபல திரையரங்குகளில் ஒன்றான ரோஹினி திரையரங்கம் விக்ரம் படம் பற்றிய தகவல் ஒன்றைப் பகிர்ந்துள்ளது.

Vikram becomes most footfall movie in Rohini screen

Also Read | திருமணம் முடிந்ததும் நயன்தாரா- விக்னேஷ் சிவன் சென்றது எங்கு தெரியுமா? Viral pics

விக்ரம் வெற்றி…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் விக்ரம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

Vikram becomes most footfall movie in Rohini screen

கமல் கொடுத்த அன்புப் பரிசுகள்…

விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார். இந்த கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும்.  இந்த லெகஸஸ் செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் இயக்குனர் லோகேஷின் உதவியாளர்கள் 13 பேருக்கு மோட்டார் பைக்குகளையும் பரிசாக வழங்கியுள்ளார். மற்றும் நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றையும் பரிசாக வழங்கினார். இதையடுத்து படத்தின் வெற்றியை அடுத்து பத்திரிக்கையாளர்களையும் இயக்குனர் லோகேஷுடன் சந்தித்து பேசினார்.

Vikram becomes most footfall movie in Rohini screen

பாகுபலி 2 சாதனையைக் கடந்த விக்ரம்…

இந்நிலையில் தற்போது இரண்டாவது வாரத்தில் விக்ரம் திரைப்படம் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கமான ரோஹினி திரையரங்கில் பாகுபலி 2 படைத்த சாதனை ஒன்றை முறியடித்துள்ளது. ரோஹினி திரையரங்கின் ‘ரோஹினி சில்வர் ஸ்க்ரீனில்’ கடந்த 5 ஆண்டுகளில் ஒரு வாரத்தில் அதிக பார்வையாளர்கள் பார்த்த படமாக பாகுபலி 2 இருந்துள்ளது. அந்த சாதனையை தற்பொது விக்ரம் திரைப்படம் முறியடித்துள்ளதாக திரையரங்க நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vikram becomes most footfall movie in Rohini screen

ஏற்கனவே வெற்றிக்கொண்டாட்டத்தில் இருக்கும் விக்ரம் பட ரசிகர்களுக்கு இந்த தகவல் கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Also Read | BGM 8 MOMENTS: “அஜித்துக்கு on screen-ல சரியான ஜோடினா…” டக்குன்னு விக்னேஷ் சிவன் சொன்ன பெயர்

தொடர்புடைய இணைப்புகள்

Vikram becomes most footfall movie in Rohini screen

People looking for online information on Baahubali 2, Footfall movie, Kamal Haasan, Rohini screen, Vikram will find this news story useful.