Veetla Vishesham Others Page USA

“சார் ஒரு Photo…”… Geniune ஆக மறுத்த அஜித்… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் ஏர்போட்டில் இருந்து வெளியேறும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ajith genuinely refused to take selfie with fan

Also Read | BGM 8: “கார் வாங்கணும்னா முதல்ல வீடு வாங்கனும்…” மேடையில் கலக்கிய ‘ஜெய்பீம்’ மணிகண்டன்

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தின் அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது. இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

AK 61

இந்த இரு படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி பூஜையுடன் படப்பிடிப்பும் துவங்கியது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது தற்காலிகமாக ‘அஜித் 61’ என அழைக்கப்பட்டு வருகிறது.

Ajith genuinely refused to take selfie with fan

படப்பிடிப்பு…

அதையடுத்து படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. அஜித் 61 படம் ஒரு வங்கி சம்மந்தமான பிரச்சனையை மையமாகக் கொண்ட படம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சமுத்திரக்கனி மற்றும் மஞ்சுவாரியர் மற்றும் ராஜதந்திரம் வீரா ஆகியோர் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளனர். ஐதராபாத்தில் நடந்து முதல் கட்டப்பிடிப்பு 47 நாட்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அமைக்கப்பட்ட செட் மற்றும் அலுமினிய தொழிற்சாலை ஆகியவற்றில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

ஏர்போட்டில் அஜித்…

இந்நிலையில் தற்போது அஜித் AK 61 கெட் அப்பில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அஜித் ஏர்போட்டில் இருந்து வெளியேற முற்படுகையில் வாசல் அருகே ரசிகை ஒருவர் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா எனக் கேட்கிறார். ஆனால் வாசல் அருகே எடுத்தால் அங்கே கூட்டம் கூடி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அந்த ரசிகையிடம் அஜித் பணிவாக மறுத்துவிட்டு அவரிடம் ‘sorry’ சொல்லிவிட்டு செல்கிறார். ஆனால் அதன் பின்னர் விமான நிலையம் உள்ளே பல ரசிகர்களுடன் சேர்ந்து அஜித் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Also Read | மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஹிட்டான ‘SVP’… பிரபல ஓடிடியில்… ரிலீஸ் தேதி Update

“சார் ஒரு PHOTO…”… GENIUNE ஆக மறுத்த அஜித்… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith genuinely refused to take selfie with fan

People looking for online information on Ajith fans, Ajith Kumar, Ajith take selfie with fans will find this news story useful.