BGM 8: “கார் வாங்கணும்னா முதல்ல வீடு வாங்கனும்…” மேடையில் கலக்கிய ‘ஜெய்பீம்’ மணிகண்டன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மணிகண்டன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

Jaibhim fame manikandan viral speech in BGM 8 stage

Also Read | “குட்டிப் பாப்பா வரப்போகுது”… “என்ன சொல்றீங்க…?” – வைரலாகும் R J பாலாஜியின் Prank வீடியோ

BGM 8

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி கடந்த மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர். இது சம்மந்தமான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Jaibhim fame manikandan viral speech in BGM 8 stage

சிறந்த நடிகர்…

இந்த மேடையில் ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்ததற்காக விருதுக்குழுவினரின் சிறப்பு பிரிவில் சிறந்த நடிகருக்கான விருது நடிகர் மணிகண்டனுக்கு வழங்கப்பட்டத். விருதை பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவர்கள் மணிகண்டனுக்கு வழங்கினார். விருது பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்து பேசிய மணிகண்டன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல மிமிக்ரி செய்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

Jaibhim fame manikandan viral speech in BGM 8 stage

கார் வாங்கணும்னா…

விழா தொகுப்பாளர்கள் எப்போது “கார் வாங்கியாச்சா” எனக் கேட்டபோது, மணிகண்டன் “இன்னும் இல்லை. நான் முன்னாடியே சொன்னடுதான். எங்ல்க வீட்ல கார் எல்லாம் நிறுத்த முடியாது. நான் கார் வாங்கணும்னா முதல்ல வீடு வாங்கனும். அதனால்தான். மத்தபடி கார் வாங்கக்கூடாதுன்னுலாம் ஒன்னும் இல்ல” எனக் கலகலப்பாக பேசினார். மணிகண்டன் நடிகராக மட்டுமில்லாமல், மிமிக்ரி கலைஞராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், இயக்குனராகவும் பலதுறைகளில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | “யாருக்காவது பர்த்டே wish பண்ணா போதும்… யாருப்பா நீங்க எல்லாம் …” பிரியா பவானி சங்கர் Exclusive

BGM 8: “கார் வாங்கணும்னா முதல்ல வீடு வாங்கனும்…” மேடையில் கலக்கிய ‘ஜெய்பீம்’ மணிகண்டன் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Jaibhim fame manikandan viral speech in BGM 8 stage

People looking for online information on Behindwoods Gold Medal Award, Behindwoods Gold Medal Award 8th Edition, BGM8, Jai Bhim, Manikandan, Real Rajakannu will find this news story useful.