ஹன்சிகா நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கும் ‘MY3’ ஷூட்டிங் அப்டேட்… சாந்தணு பகிர்ந்த BTS pics

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் பிரபல நடிகர்கள் நடிப்பில் ‘MY3’ என்ற வெப் தொடர் உருவாகி வருகிறது.

Actor shantnu shared MY3 web series BTS pics

ஹன்சிகா நடிப்பில் வெப் தொடர்…

ஹன்சிகா நடிப்பில் உருவாகும் புதிய வெப் தொடருக்கு மை 3 எனப் பெயரிடப்பட்டுள்ளது. ட்ரெண்ட்லவுட் தயாரிக்கும் இந்த இணைய தொடரை தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனர் ராஜேஷ் M இயக்குகிறார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் முகேன் ராவ், சாந்தனு, ஆஷ்னா ஜவேரி, ஜனனி ஐயர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கணேசன் இசையமைக்கிறார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார்.  சமீபத்தில் இந்த தொடரின் “மை3” தலைப்பை  நடிகை ஹன்சிகா மோத்வானி, முகேன் ராவ் பிக்பாஸ் ஹவுஸில் போட்டியாளர்களுடன் இணைந்து வார இறுதி நிகழ்ச்சியில் வெளியிட்டனர்.

Actor shantnu shared MY3 web series BTS pics

எம் ராஜேஷின் முதல்முறை அனுபவம்…

இந்த தொடர் பற்றி பேசி இருந்த இயக்குனர் எம் ராஜேஷ் “இணைய தொடர் இயக்குவது எனக்கே முற்றிலும் புதிதான அனுபவம். மக்களின் திரை அனுபவம் நிறைய மாறிவிட்டது. ஒரு திரைப்படம் சென்றடைவதை விட, மிக அதிக வேகத்தில் இணைய தொடர் மக்களை சென்றடைந்து விடுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்று உலகமெங்கும் கோலோச்சும் நிறுவனத்தில் எனது முதல் இணைய தொடரை  இயக்குவது மிக பெருமையாக உள்ளது. தமிழ் இணைய தொடர்களின் போக்கை மாற்றி புதிய அனுபவங்களை அளித்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில், ‘மை3’ தொடர் ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். இது ஒரு ரொமான்ஸ் காமெடி தொடர்,  இன்றைய இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் காமெடி கலந்த ஜனரஞ்சக தொடராக இருக்கும்.” எனக் கூறியிருந்தார்.

Actor shantnu shared MY3 web series BTS pics

படப்பிடிப்பு…

இந்த தொடரின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்துவந்த நிலையில் இப்போது தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சாந்தணு படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துவிட்டதாக அறிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்புக் குழுவினருடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர, அது இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actor shantnu shared MY3 web series BTS pics

People looking for online information on Hansika, M Rajesh, My3, Shantnu will find this news story useful.