காக்கா முட்டை, கனா வரிசையில் மிரட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் … Title உடன் வெளியான Firstlook!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Aishwarya Rajesh new movie Driver jamuna first look

அடையாளம் தந்த காக்கா முட்டை…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காக்க முட்டை, வடசென்னை, அட்டகத்தி ஆகிய படங்களில் அவரின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது. தமிழ் சினிமாவில் நயன்தாரா, திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்துவருகிறார்.தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தொடர்ந்து நல்ல வேடங்கள் கொண்ட படங்கள் கிடைத்து வருகின்றன.

Aishwarya Rajesh new movie Driver jamuna first look

Heroine oriented movies…

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து முன்னதாக வெளியான கனா திரைப்படம் அவருடைய கேரியரில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து ஒரு முக்கியமான வேடத்திலும் நடித்திருந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்றது கனா திரைப்படம். இந்த திரைப்படம் சமீபத்தில் சீனாவிலும் வெளியாகி சாதனை படைத்தது. 2.0 படத்துக்குப் பிறகு தமிழ்ப்படம் ஒன்று சீனாவில் வெளியாவது இதுவே முதல்முறையாக அமைந்தது.

Aishwarya Rajesh new movie Driver jamuna first look

அதுபோலவே அண்மையில் இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த க/பெ ரணசிங்கம் படமும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளைப் பெற்று தந்தது. இப்போது அவர் நடிப்பில் சில படங்கள் உருவாகி வருகின்றன.

டிரைவர் ஜமுனா…

இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் தான் நடிக்கும் புதிய படமான டிரைவர் ஜமுனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால்டாக்ஸி ஓட்டுனர் வேடத்தில் நடிப்பது போஸ்டர் மூலம் தெரிகிறது. முகத்தில் ரத்தக் காயங்களுடன் மிரட்டலான தோற்றத்தில் இந்த போஸ்டர்களில் ஐஸ்வர்யா காணப்படுகிறார். இந்த பட்த்தை இயக்குனர் பி கின்ஸ்லின் இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பாக சவுத்ரி என்பவர் தயாரிக்கிறார். போஸ்டரும் வித்தியாசமான தலைப்பும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைந்துள்ளன.

Aishwarya Rajesh new movie Driver jamuna first lookhttp:// https://behindwoods.com/bgm8

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

காக்கா முட்டை, கனா வரிசையில் மிரட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் … TITLE உடன் வெளியான FIRSTLOOK! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Aishwarya Rajesh new movie Driver jamuna first look

People looking for online information on Aishwarya Rajesh, Driver Jamuna will find this news story useful.