போடு வெடிய.. வெங்கட் பிரபு - நாக சைதன்யா இணையும் #VP11.. படத்தில் இணைந்த பிரபல ஒளிப்பதிவாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநாடு, மன்மத லீலை படங்களைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் இணைய உள்ளார்.

SR Kathir has been roped as a DOP for nagachaitanya VP11

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் வெளியாகி இருந்தது.டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை அனைத்து தரப்பிலான மக்களுக்கு புரியும் வகையில், நேர்த்தியாக இயக்கி இருந்தார் வெங்கட் பிரபு.

SR Kathir has been roped as a DOP for nagachaitanya VP11

 மாநாடு திரைப்படமும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று, 117 கொடி ரூபாய் வசூல் செய்து பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, மிகவும் குறுகிய காலத்தில், நடிகர் அசோக் செல்வனை வைத்து அவர் இயக்கிய மன்மத லீலை திரைப்படமும், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகியது.

SR Kathir has been roped as a DOP for nagachaitanya VP11

அடுத்ததாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் அடுத்து வெங்கட் பிரபு இணையும் இருமொழி படம் குறித்த புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன் வெளிவந்தது. இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணையும் அவரது 22வது படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாக உள்ளது.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இதுவாகும். அதே போல, தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளராக ஒளிப்பதிவாளர் S.R. கதிர் செயல்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இவர் கற்றது தமிழ் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர். அதனைத்தொடர்ந்து பருத்தி வீரன் (கூடுதல் ஒளிப்பதிவு), சுப்ரமணியபுரம், நாடோடிகள்,ஈசன், போராளி, நீ தானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால் (கூடுதல் ஒளிப்பதிவு), கிடாரி, ராஜதந்திரம், வெற்றிவேல், லென்ஸ், அசுரவதம், கொடி வீரன், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களுக்கு அழகியலுடன் கூடிய மிரட்டலான ஒளிப்பதிவை தந்தவர்.

ஜூன் 23 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

தொடர்புடைய இணைப்புகள்

SR Kathir has been roped as a DOP for nagachaitanya VP11

People looking for online information on Naga chaitanya, SR Kadhir, Venkat Prabhu, VP11 will find this news story useful.