"12 வருஷத்துக்கு அப்றம்.." சசிகுமார் டைரக்ஷன்.? "பிரபல ஹீரோவின் மகன் தான் நடிகரா?.. செம"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுப்ரமணியபுரம் என்னும் படத்தை இயக்கி, ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார்.

Sasikumar to direct web series based on kutra parambarai novel

Also Read | வீடியோ காலில் விஜய் சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் தம்பதி.. "#Thalapathy66"-ல் தளபதி லுக் இதானோ..?.."

கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை, சுப்ரமணியபுரம் படத்தை பார்த்து, பலரும் வியந்து போயினர். பலரின் ஃபேவரைட் சினிமாவாகவும் சுப்ரமணியபுரம் அமைந்திருந்தது.

இதனையடுத்து, ஈசன் என்னும் திரைப்படத்தை கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்கி இருந்த சசிகுமார், அதன் பிறகு இயக்கம் பக்கம் திரும்பவே இல்லை.

அடுத்தடுத்து திரைப்படங்கள்..

மொத்தம் இரண்டு படங்களை மட்டுமே இயக்கி இருந்த சசிகுமார், அடுத்தடுத்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, கிடாரி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நாயகனாக நடித்து வந்தார். இதற்கு மத்தியில், சில திரைப்படங்களை தயாரித்தும் வந்தார் சசிகுமார். சுமார் 12 ஆண்டுகளுக்கும் மேலாக, திரைப்படங்கள் எதுவும் சசிகுமார் இயக்காமல் இருந்து வருவதால், இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பியும் வந்தனர்.

Sasikumar to direct web series based on kutra parambarai novel

டைரக்ஷனில் மீண்டும் என்ட்ரி..

இது பற்றி சில நேர்காணலிலும் சசிகுமார் பதில் அளித்திருந்தார். இந்நிலையில், சசிகுமார் மீண்டும் இயக்கம் பக்கம் கவனம் செலுத்தவுள்ளது பற்றி, அசத்தலான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப் பரம்பரை' என்னும் நாவலை மையப்படுத்தி, வெப் சீரியஸ் ஒன்றை சசிகுமார் இயக்கப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான விஜயகாந்தின் மகன் ஷண்முகபாண்டியன் நடிக்கவுள்ளதாவும் கூறப்படுகிறது. ஷண்முகபாண்டியன் ஏற்கனவே சகாப்தம், மதுரை வீரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

Sasikumar to direct web series based on kutra parambarai novel

குற்றப் பரம்பரை நாவலை மையப்படுத்தி, சசிகுமார் இயக்கவுள்ள வெப் சீரியஸை பிரபல ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் தயாரிக்கவுள்ளதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

நீண்ட வருடங்களுக்கு பிறகு, மீண்டும் இயக்கத்தை நோக்கி சசிகுமார் களமிறங்கப் போவதாக வெளிவந்துள்ள தகவல், சினிமா ரசிகர்கள் பலருக்கும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல், எப்போது வெளிவரும் என்ற எதிர்பார்ப்பிலும் அவர்கள் உள்ளனர்.

Sasikumar to direct web series based on kutra parambarai novel

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

"12 வருஷத்துக்கு அப்றம்.." சசிகுமார் டைரக்ஷன்.? "பிரபல ஹீரோவின் மகன் தான் நடிகரா?.. செம" வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sasikumar to direct web series based on kutra parambarai novel

People looking for online information on குற்றப் பரம்பரை, சசிகுமார், Kutra parambarai novel, Sasikumar, Web Series will find this news story useful.