சார்பட்டா வெற்றிக்குப் பின் மீண்டும் ஓடிடியில்… ஆர்யா நடிக்கும் வெப் சீரீஸ் Title அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் த்ரில்லர் வெப் சீரிஸின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டை அமேசான் ப்ரைம் நிறுவனம் அறிவித்துள்ளது.

Arya ott debut web series after sarpatta hit

Also Read | அஜித் பிறந்தநாளில் போனி கபூரின் viral பதிவு…. ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

ஆர்யா…

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த ஆர்யாவை நான் கடவுள் திரைப்படம் அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது. அதையடுத்து கமர்ஷியலாகவும், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் மாறி மாறி நடித்து வருகிறார் ஆர்யா. சமீபத்தில் அவரின் சார்பட்டா பரம்பரை மற்றும் அரண்மணை 3 ஆகிய படங்கள் ரிலீஸாகி கவனத்தைப் பெற்றன.

Arya ott debut web series after sarpatta hit

சார்பட்டா பரம்பரை வெற்றி…

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்ப்பட்டா பரம்பரை நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.  இந்த ஹிட்டால் ஆர்யாவின் அடுத்தடுத்த படங்கள் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. அவரது  நடிப்பில் அடுத்ததாக வரவிருக்கும் கேப்டன் படத்திற்கு வர்த்தக வட்டாரங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றன. “டெடி” படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் கவனத்தை ஈர்த்தது.

Arya ott debut web series after sarpatta hit

ஆர்யாவின் ஓடிடி அறிமுகம்..

இந்நிலையில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் புதிய வெப் சீரிஸான ‘தி வில்லேஜ்’ பற்றிய அறிவிப்பைத் தற்போது அமேசான் ப்ரைம் வீடியோ வெளியிட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் ஆர்யாவை  சில கைகள் அவரை மலையிலிருந்து இழுக்க முயல்கின்றன. மற்றொரு போஸ்டரில் ஒரு குழந்தையோடு ஆர்யா பதற்றமாக இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.

Arya ott debut web series after sarpatta hit

தனது வெப் சீரிஸ் அறிமுகம் குறித்து பேசிய ஆர்யா, " ’தி வில்லேஜ்’ எனது வெப் சீரிஸ் அறிமுகமாகும். நாங்கள் அதை ஜாலியாக செய்தோம். இது வழக்கமான தொடர் அல்ல,  சவாலானது.” எனக் கூறியுள்ளார். அமேசான் ப்ரைம் தங்களுடைய அடுத்தடுத்த படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

சார்பட்டா வெற்றிக்குப் பின் மீண்டும் ஓடிடியில்… ஆர்யா நடிக்கும் வெப் சீரீஸ் TITLE அறிவிப்பு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Arya ott debut web series after sarpatta hit

People looking for online information on Arya, Sarpatta movie, Web Series will find this news story useful.