ஒரு பக்கம் ஹிந்தி வெப் சீரிஸ்?.. மறுபக்கம் வரலட்சுமி படத்தில் 'Hero'.. அசத்தும் BiggBoss பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, பெரிய வெற்றி பெற்றதை அடுத்து, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது.

Ganesh venkatraman new hindi web series sources

Also Read | அப்போ நயன்தாரா-க்கு.. இப்ப சுந்தர் சி-க்கு.. வில்லனாக மிரட்டும் அனுராக் .. என்ன கேரக்டர்?

அந்த வகையில், தமிழில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி வந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் வரும் பலரும், இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பிரபலத்தை பயன்படுத்தி, தங்களின் திரை பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளனர்.

ஹிந்தியில் வெப் சீரியஸ்..

இந்நிலையில், தமிழின் முதல் பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக வந்து, மூன்றாம் இடத்தை பிடித்திருந்த நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், தற்போது ஹிந்தி வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்கவுள்ளது பற்றி, நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ள இந்த வெப் சீரியஸில் நடிப்பதற்காக தற்போது மும்பையில் கணேஷ் வெங்கட்ராமன் சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளிவராத நிலையில், விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ganesh venkatraman new hindi web series sources

வரலட்சுமி படத்திலும் முக்கிய ரோல்..

அதே போல, பிரபல நடிகையான வரலட்சுமி சரத்குமார் தற்போது நாயகியாக நடித்து வரும் 'சபரி' என்னும் திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் கணேஷ் வெங்கட்ராமன். இந்த திரைப்படத்தில், வரலட்சுமி மற்றும் கணேஷுடன் மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

Ganesh venkatraman new hindi web series sources

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் தயாராகும் 'சபரி' என்னும் திரைப்படம், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமுள்ள படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. வரலட்சுமியின் சபரி படம் பற்றி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Ganesh venkatraman new hindi web series sources

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

ஒரு பக்கம் ஹிந்தி வெப் சீரிஸ்?.. மறுபக்கம் வரலட்சுமி படத்தில் 'HERO'.. அசத்தும் BIGGBOSS பிரபலம் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ganesh venkatraman new hindi web series sources

People looking for online information on Ganesh Venkatraman, Hindi web series, Varalaxmi Sarathkumar will find this news story useful.