சிந்துன ரத்தத்துக்கு சொந்தம் வராமலா போயிடும் - அஜித் ரசிகர்களின் மாஸ் ட்ரென்ட்
முகப்பு > சினிமா செய்திகள்அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் #GetWellSoonThala எனும் ஹாஷ்டாக்கை ட்ரென்ட் அடித்து வருகின்றனர். அதுகுறித்த ஒரு சிறிய அலசல்.
நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஹெச். இயக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பில் இன்று நடிகர் அஜித் காயமடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால் படப்பிடிப்பில் எந்த மாற்றமும் இல்லாமல் திட்டமிட்டப்படியே நடக்கும் என கூறப்பட்டது. இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் #GetWellSoonThala எனும் ஹாஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரென்ட் அடித்து வருகின்றனர்.
இப்படி அஜித்துக்கு காயமடைவது முதல் முறையல்ல. ரேஸ் பந்தயங்களில் ஈடுபாடு கொண்ட அவருக்கு பல முறை அடிப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும் அவர் அதை எல்லாம் தாண்டி ஒவ்வொரு முறையும் ரசிகர்களுக்காக படங்களில் வெவ்வேறு ஸ்டன்ட்களில் ஈடுபட்டு வருகிறார். மங்காத்தா பைக் வீலிங் சீன், பில்லா 2 ஹெலிகாப்டரில் தொங்குவது, ஆரம்பம் படத்தில் கார் சீன் என ஸ்டன்ட் சீன்களை அஜித் டூப் போடாமல் செய்வது தான் வழக்கம். வேறு ஒரு ஆளை டூப்பாக போட்டு இதையெல்லாம் எடுப்பது பெரிய விஷயமே இல்லை. ஆனாலும் தனது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்த அஜித் டூப் என்ற ஒன்றின் பக்கமே போவதில்லை. அதனால் தான் அவர் ரசிகர்கள் இப்போது ட்ரென்ட் அடித்து கொண்டாடுகிறார்கள்.
இந்த அடிகளால் ஒருபோதும் அஜித் முடங்கிவிட போவதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இன்னும் நினைவிருக்கிறது. வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடலை எடுக்கும் முன் அஜித்துக்கு காலில் பிரச்சனை இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அப்பாடலில் அவர் ஆடிய ஆட்டத்தை பார்த்தால், யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள். அப்படி அவர் ஆடிய அந்த பாடல் நாற்பது வயது தாண்டியவர்கள் முதல் நண்டு சிண்டு வரை ரீச் ஆனது. உழைப்பு மட்டுமே தன் வலிமை என கொண்டவருக்கு இந்த காயங்கள் ஒன்றும் பெரிய விஷயமல்ல என்பது தான் உண்மை. அஜித் எப்போதும் எரிந்து போன சாம்பலில் இருந்து மீண்டு வரும் ஃபீனிக்ஸ் பறவைதான்.
வீறுகொண்டு ஏறும் போது மாமலை கூட கால்களின் கீழே தான். மோதிக்கொண்டு நீந்தும் போது பேரலை கூட தோள்களின் கீழே தான். இதை சொல்லியதும் அஜித்குமார். அத்தகைய தன்னம்பிக்கை கொண்ட ஒருவர் இப்போது காயமடைந்து இருப்பது அனைவருக்கும் வருத்தமான ஒரு செய்தியை கொடுத்திருக்கிறது. இன்று திரையுலகத்தினர் ஷாந்தனு, பிரசண்ணா என பலரும் அவர் மீண்டு வர வேண்டும் என ஆறுதல் கூறி வருகின்றனர். அவரது ரசிகர்கள் அஜித்தை இந்திய அளவில் ட்ரென்ட் அடித்து வருகின்றனர். இதுதான் அஜித் சேர்த்து வைத்த சொத்து. இந்த பிரார்த்தனைகள் ஒன்று போதும், தல பக்கவாக ஷூட்டிங் திரும்புவதற்கு.
காயம்பட்ட சிங்கத்தோட மூச்சு கர்ஜனைய விட பெரியதாக இருக்கும். அதே போல இந்த தல தீபாவளி வேற லெவல் வலிமையா இருக்கும்னு நிச்சயம் நம்பலாம்.