அஜித்தின் வலிமை - ஷூட்டிங்கில் காயமடைந்த தல! ஹெச்.வினோத் நெக்ஸ்ட் ப்ளான் என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்அஜித் நடித்த வலிமை படத்தின் ஷூட்டிங்கில் அவர் காயமடைந்ததாக தகவல் தெரியவந்துள்ளது.

அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. ஹெச்.வினோத் இத்திரைப்படத்தை இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். வலிமை படத்தின் கதாநாயகி மற்றும் வில்லன் ஆகியோரை பற்றிய தகவலை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் வலிமை படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் அஜித்குமார் காயமடைந்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சிறிய அளவிலான காயமே அவருக்கு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து எந்த மாற்றமும் இல்லாமல், திட்டமிட்டப்படி ஷூட்டிங் தொடரும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வலிமை படம் தீபாவளிக்கு வருவதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.