தல அஜித் ஃபைட் சீனில் டூப் இல்லாம் ரிஸ்க் எடுக்கும்.... - 'மாஸ்டர்' நடிகர் கருத்து

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு தல அஜித் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தல அஜித்துக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் திட்டமிட்டபடி ஷூட்டிங் நடைபெறும் எனவும் எங்களுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலிமை படப்பிடிப்பில் காயமடைந்த தல அஜித் நலம் பெற வேண்டி மாஸ்டர் நடிகர் ஷாந்தனு ட்வீட் | Master Actor S

இந்நிலையில் தல அஜித் நலம் பெற வேண்டி பல்வேறு பிரபலங்கள் ட்வீட் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் ஷாந்தனு, தல விரைவில் குணமாக வேண்டுகிறேன். சண்டைகாட்சிகளில் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுக்கும் நடிக்கும் நடிகர்களில் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கி வரும் தல அஜித்தின் 'வலிமை' படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Entertainment sub editor