www.garudabazaar.com

“எம்மா.. ஏ..”.. வைரல் வீடியோவை தொடர்ந்து அஜித் பட ஹீரோயினுடன் ‘எதிர்நீச்சல்’ மாரிமுத்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகர் மாரிமுத்து கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர்.

actress kaniha posted photo with ethirneechal marimuthu

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'விடுதலை'-க்கு பிறகு பிரதான கதாபாத்திரத்தில் சூரி.. வெளியான 'கொட்டுக்காளி' டீஸர் வீடியோ!

அவர் இன்று முன்னணி இயக்குனர்களாக இருக்கும் பலரிடம் பணிபுரிந்துள்ளதுடன், அவர்களின் திரைப்படங்களில் ஆளுமைமிக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.  குறிப்பாக நடிகர் மாரிமுத்து பல திரைப்படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றவர் .

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாரிமுத்து, விஷால் நடித்த மருது, கார்த்தி நடித்த கொம்பன், சமுத்திரகனி-கருணாஸ் நடித்த சங்கத் தலைவன், கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், ஆர்.கே.சுரேஷ் நடித்த விசித்திரன், மிஷ்கினின் யுத்தம் செய் ஆகிய பல திரைப்படங்களின் நடித்திருக்கிறார்.

actress kaniha posted photo with ethirneechal marimuthu

Images are subject to © copyright to their respective owners.

அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகவுள்ள கண்ணை நம்பாதே திரைப்படத்தில் மாரிமுத்து நடித்துள்ளார்.  இதனிடையே சன் டிவியில் இயக்குனர் திருச்செல்வம் இயக்கும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், இந்த கதாபாத்திரத்துக்கே உரிய ஆளுமையால் பிரபலமானார்.

அண்மையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகை காயத்ரியுடன் இணைந்து ரீல்ஸ் பதிவிட்ட நடிகர் மாரிமுத்து, “எம்மா ஏ..” என அதட்டலாக அழைத்த பின்னர் நெகிழ்ச்சியுடன், “அட.. உன்னை இல்லம்மா.. பெண்கள் தினத்திற்கு வாழ்த்துக்கள்” என ரசிகர்களை பார்த்து கூறியிருந்தார். இந்த வீடியோ மிகவும் வைரலானது. இந்த நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை கனிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கனிகா வெளியிட்டு இருக்கிறார்.

actress kaniha posted photo with ethirneechal marimuthu

Images are subject to © copyright to their respective owners.

அஜித்தின் வரலாறு திரைப்படத்தில் நடித்த நடிகை கனிகா தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஆளுமை மிக்க கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். அண்மையில் காலில் காயமானதாக தெரிவித்திருந்த நடிகை கனிகா, தற்போது நடிகர் மாரிமுத்துவுடன் எடுத்துக்கொண்ட ஃபோட்டோவை பதிவிட்டு, “எதிர்நீச்சல் ரசிர்களே.. இந்த ஃபோட்டோவுக்கு தலைப்பு வைங்கள் பார்ப்போம்.. ஈஸ்வரி மற்றும் ஆதி குணசேகரனின் மைண்ட் வாய்ஸ் இப்படி இருக்கும்.. கொஞ்சம் Fun கொஞ்சம் Jolly” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | "லோகேஷ் LCU மாதிரி இதுலயும்".. அடுத்த படம் பத்தி உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சூப்பர் தகவல்..

தொடர்புடைய இணைப்புகள்

actress kaniha posted photo with ethirneechal marimuthu

People looking for online information on Actor marimuthu, Ethirneechal, Kaniha, Marimuthu will find this news story useful.