www.garudabazaar.com

"2023-ல் இன்னும்".. விலையுயர்ந்த Harley Davidson பைக்கில் நடிகை கனிகா.. அவரே பகிர்ந்த ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கனிகா உலகப் புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்து இருப்பது போல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Actress Kaniha Instagram Post about Her Harley Davidson Bike

Also Read | சூரரைப் போற்று இந்தி ரீமேக்.. சூர்யாவை டேக் செய்து G V பிரகாஷ் கொடுத்த செம அப்டேட்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா.

மதுரையை சார்ந்த இவர் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார்.

பின் நடிகர் அஜித்துடன் வரலாறு (2006) படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார்.  ஆட்டோ கிராப், எதிரி படங்களிலும் நடித்துள்ளார்.

Actress Kaniha Instagram Post about Her Harley Davidson Bike

ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியதும் கனிகா தான். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

Actress Kaniha Instagram Post about Her Harley Davidson Bike

தற்போது தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்துள்ளார்.  நடிகை கனிகா தற்போது சன் டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கனிகாவும் ஒருவர். நடிகை கனிகா, அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டவர்.

Actress Kaniha Instagram Post about Her Harley Davidson Bike

இந்நிலையில் நடிகை கனிகா, தனது ஹார்லி டேவிட்சன் பைக்கில் அமர்ந்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த 2023 ஆம் ஆண்டு இன்னும் நன்றாக பைக் ரைடு செய்ய வேண்டும்" என்றும் ட்வீட் செய்துள்ளார். நடிகை கனிகா கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்த ஹார்லி டேவிட்சன் ஐயர்ன் 883 பைக்கை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaniha (@kaniha_official)

Also Read | யோகி பாபு மகனின் பிறந்தநாள் விழா.. நேரில் வாழ்த்திய அமைச்சர் மா. சுப்ரமணியன்!

Actress Kaniha Instagram Post about Her Harley Davidson Bike

People looking for online information on Harley Davidson Bike, Kaniha, Kaniha Instagram Post will find this news story useful.