www.garudabazaar.com

நடிச்சுகிட்டே 12th-ல இவ்வளவு மார்க் எடுத்துருக்காரே.!! பிரபல சீரியல் நடிகர் ரித்திக் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எதிர் நீச்சல் சீரியல் நடிகர் ரித்விக் ராகவேந்திரா நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

Ethirneechal Rithik Dharshan Exclusive about His 12th Mark

Images are subject to © copyright to their respective owners.

சன் டிவியில் தற்போது  ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. நடிகை தேவயானி நடிப்பில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'கோலங்கள்' மெகாத்தொடரை இயக்கிய இயக்குனர் திருச்செல்வம் இந்த 'எதிர்நீச்சல்' தொடரையும் தற்போது இயக்கி வருகிறார்.

இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் தர்ஷன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரித்திக் ராகவேந்திரா. கனிகா & மாரிமுத்துவின் மகனாக இந்த சீரியலில் நடித்து வருகிறார்.

Ethirneechal Rithik Dharshan Exclusive about His 12th Mark

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகர் ரித்திக் ராகவேந்திரா அளித்துள்ளார். அதில் 12வதுல என்ன குரூப் நீங்க? என்ற கேள்விக்கு, "நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப். 12 வது வகுப்பை நான் எதிர் நீச்சல் சீரியல்ல தான் நடிச்சுட்டே படிச்சேன். ஷூட்டிங் இன்னைக்கு நடக்கும்னா நாளைக்கு பரிட்சை இருக்கும். நடிக்கிறதுக்கு நடுவில் இருக்கும் இடைவேளை நேரத்தில் தான் படிச்சேன். இரவு முழுவதும் தூங்காமல் படிச்சுட்டு பரிட்சை முடிந்ததும் ஷூட்டிங் வந்துடுவேன்". என ரித்திக் ராகவேந்திரா பதில் அளித்தார்.

"என்ன மார்க் நீங்க சொல்லமுடியுமா?" என்ற கேள்விக்கு "512/600" என ரித்திக் பதில் அளித்தார். மேலும் "எனக்காக இயக்குனர் ஷூட்டிங் செட்யூலை கூட மாத்தி வச்சார்." என ரித்திக் ராகவேந்திரா பதில் அளித்தார்.

நடிச்சுகிட்டே 12TH-ல இவ்வளவு மார்க் எடுத்துருக்காரே.!! பிரபல சீரியல் நடிகர் ரித்திக் EXCLUSIVE வீடியோ

Ethirneechal Rithik Dharshan Exclusive about His 12th Mark

People looking for online information on Ethir Neechal, Ritvik Raghvendra will find this news story useful.