www.garudabazaar.com

'விடுதலை' படத்தின் முதல் பாகம் ரிலீஸ் எப்போ? வெற்றிமாறன் சொன்ன சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் வெற்றிமாறன், பட ரிலீஸ் குறித்து பேசியுள்ளார்.

Vetrimaran talked about Viduthalai Movie Release Update

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதிய படம்.. போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

Vetrimaran talked about Viduthalai Movie Release Update

Images are subject to © copyright to their respective owners.

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Vetrimaran talked about Viduthalai Movie Release Update

Images are subject to © copyright to their respective owners.

விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் டிரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், படத்தின் ரிலீஸ் குறித்து பேசியுள்ளார். "விடுதலை படத்தை மார்ச் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டு வருவதாக" கூறியுள்ளார். மார்ச் மாதம் 30 அல்லது 31 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்'.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை தியேட்டர்ல ரிலீசா? செம்ம சம்பவம்

'விடுதலை' படத்தின் முதல் பாகம் ரிலீஸ் எப்போ? வெற்றிமாறன் சொன்ன சூப்பர் தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vetrimaran talked about Viduthalai Movie Release Update

People looking for online information on Vetrimaaran, Viduthalai will find this news story useful.