www.garudabazaar.com

"லோகேஷ் LCU மாதிரி இதுலயும்".. அடுத்த படம் பத்தி உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சூப்பர் தகவல்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.

Udhayanidhi Stalin about Lokesh kanagaraj LCU in next movie

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'விடுதலை'-க்கு பிறகு பிரதான கதாபாத்திரத்தில் சூரி.. வெளியான 'கொட்டுக்காளி' டீஸர் வீடியோ!

திரைப்படங்களில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது அமைச்சரான பிறகு முழு நேர அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருகிறார். அதே போல, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய உதயநிதி ஸ்டாலின், தற்போது அரசியலில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மறுபக்கம், உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த சில திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் என்றும் தெரிகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு உதயநிதி நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி இருந்த கலகத்தலைவன் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றிருந்தது.

Udhayanidhi Stalin about Lokesh kanagaraj LCU in next movie

Images are subject to © copyright to their respective owners.

உதயநிதி ஸ்டாலினின் "கண்ணை நம்பாதே"..

இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்ததாக "கண்ணை நம்பாதே" என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தை எடுத்த மு. மாறன், கண்ணை நம்பாதே திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தில் உதயநிதியுடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த், வசுந்தரா, ஆத்மிகா, சதீஷ், பூமிகா சாவ்லா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

க்ரைம் த்ரில்லர் வகையில் கண்ணை நம்பாதே திரைப்படம் உருவாகி உள்ள சூழலில் இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 17 ஆம் தேதி கண்ணை நம்பாதே திரைப்படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Udhayanidhi Stalin about Lokesh kanagaraj LCU in next movie

Images are subject to © copyright to their respective owners.

லோகேஷ் LCU மாதிரி..

இந்த நிலையில், கண்ணை நம்பாதே படத்தின் நடிகர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மு. மாறன் மற்றும் நடிகை ஆத்மிகா ஆகியோர் Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளனர். இதில், கண்ணை நம்பாதே திரைப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

கண்ணை நம்பாதே திரைப்படம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "லோகேஷ் கனகராஜ் LCU ன்னு சொல்லுவாங்கல்ல. அந்த மாதிரி மாறன் யூனிவெர்ஸ் இருக்கு. அருள்நிதியோட வாய்ஸ் மட்டும் இதுல வருது. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்துல அருள்நிதி வர்ற கால் டாக்ஸி கேரக்டர் இதுல வருது" என தெரிவிக்க, மாறன் யூனிவெர்ஸ் குறித்து இயக்குனர் மு. மாறனிடமே நெறியாளர் கேள்வி எழுப்பி இருந்தார்.

Udhayanidhi Stalin about Lokesh kanagaraj LCU in next movie

கண்ணை நம்பாதே படத்தில் அருள்நிதி வாய்ஸ்

இது பற்றி பேசிய மு. மாறன், "அது தேவைப்பட்டுச்சு. இந்த கேரக்டருக்கும் அந்த கேரக்டருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. Crime வெச்சு பார்க்கும் போது அவரோட Presence இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சு. நான் கதையை முழுசா சொன்னேன். அப்புறம் அவரு வந்து பண்ணி குடுத்தாரு" என தெரிவித்தார். மு. மாறன் இதற்கு முன்பு இயக்கி அருள்நிதி நடித்திருந்த இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படமும் க்ரைம் த்ரில்லர் வகையில் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | "வாரிசு, துணிவு கலெக்ஷன்".. அத தெரிஞ்சுகிட்டு.. வெளிப்படையாக பேசிய உதயநிதி.. Exclusive!!

"லோகேஷ் LCU மாதிரி இதுலயும்".. அடுத்த படம் பத்தி உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சூப்பர் தகவல்.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Udhayanidhi Stalin about Lokesh kanagaraj LCU in next movie

People looking for online information on Lokesh Kanagaraj, Lokesh kanagaraj LCU, Udhayanidhi Stalin will find this news story useful.