www.garudabazaar.com

LEO படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. போட்டோவுடன் வெளிவந்த செம்ம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லியோ படத்தின் படப்பிடிப்பில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார்.

Actor Babu Anthony Joined Leo Movie with Vijay Sanjay Dutt

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'விடுதலை' படத்தின் முதல் பாகம் ரிலீஸ் எப்போ? வெற்றிமாறன் சொன்ன சூப்பர் தகவல்!  

வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அர்ஜூன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர்

இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2 ஆம் தேதி துவங்கிய சூழலில் தற்போது காஷ்மீரில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

Actor Babu Anthony Joined Leo Movie with Vijay Sanjay Dutt

லியோ படத்திற்காக நான்காவது முறையாக நடிகர் விஜய்யுடன் இசையமைப்பாளர் அனிருத் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் S. லலித்குமார் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

Actor Babu Anthony Joined Leo Movie with Vijay Sanjay Dutt

Images are subject to © copyright to their respective owners.

லியோ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்ட சூழலில் அவை சமீபத்தில் நிறைவு பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து மிஷ்கின் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் லியோ படப்பிடிப்பை முடித்து விட்டு சமீபத்தில் சென்னை திரும்பி இருந்தனர்.

லியோ படத்தின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றி உள்ளது. ஆடியோ உரிமத்தை பிரபல சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Babu Anthony Joined Leo Movie with Vijay Sanjay Dutt

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த லியோ படத்தில் பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி இணைந்துள்ளார். தமது முகநூல் பக்கத்தில், "லோகேஷ் சார், விஜய் மற்றும் சஞ்சய் தத் ஆகியோருடன் "லியோ" படப்பிடிப்புக்கு செல்லும் வழியில். டெல்லி விமான நிலையத்தில் நமது முன்னாள் கால்பந்து வீரர் ஐ.எம்.விஜயனை சந்திக்க நேர்ந்தது." என பதிவிட்டுள்ளார்.

Also Read | ஜெயம் ரவி நடிக்கும் 'அகிலன்'.. தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை தியேட்டர்ல ரிலீசா? செம்ம சம்பவம்

தொடர்புடைய இணைப்புகள்

Actor Babu Anthony Joined Leo Movie with Vijay Sanjay Dutt

People looking for online information on Babu Anthony, Leo, Lokesh Kanagaraj, Sanjay Dutt, Vijay will find this news story useful.