''அடங்கொக்க மக்கா!!'' விவேக் காமெடியை TikTok செய்த சீன சிறுவர்கள் - வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பிகில்' படத்துக்கு கிடைத்த மாபெரும் வரவேற்புக்கு பிறகு நடிகர் விவேக் தற்போது கமல்ஹாசனுடன் முதன் முறையாக இணைந்து 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Actor Vivekh Shares a China Childran's DubsMash video in his twitter

இந்த படத்தை லைக்க புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் விவேக் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், வெளிநாட்டு சிறுவர்கள் இருவர் உத்தமபுத்திரன் பட டயலாக்கை டப் மாஷ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அடங்கொக்க மக்கா ! தமிழ் பட காமெடி சைனா வரை போயிருச்சா என்று பகிர்ந்துள்ளார்.

Entertainment sub editor

Tags : Vivekh, Tiktok