அன்று Boys படத்துல பார்த்த சாய்... எதிர்பாராத திருப்பம்... - இசையமைப்பாளர் தமன் குறித்து விவேக்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 16, 2019 09:22 PM
இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் தமன். பின்னர் ஷங்கர் தயாரித்த ஈரம் படத்துக்கு இசையமைத்தார். இந்த படத்தின் பாடல்கள் பெரிதும் வரவேற்பை பெற்றது.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் முன்னணி இசையமைப்பாளராக தமன் தடம் பதித்தார். இவரது பாடல்கள் தெலுங்கிலும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. தற்போது டிஸ்கோராஜா, வெங்கி மாமா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர. அதன் ஒரு பகுதியாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், அன்று boys படத்தில் நடித்த பையன் சாய் இன்று தெலுங்கு திரையுலகின் பிரபல இசை அமைப்பாளர் தமன்! Life has Itz own mysterious twists n turns! Happy bday Thaman bro!! என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்று boys படத்தில் நடித்த பையன் சாய் இன்று தெலுங்கு திரையுலகின் பிரபல இசை அமைப்பாளர் தமன்! Life has Itz own mysterious twists n turns! Happy bday Thaman bro!! pic.twitter.com/W36TnBbTIg
— Vivekh actor (@Actor_Vivek) November 16, 2019