''நடந்தது எல்லாம் நடந்தது தான், நான் 2015ல இப்படி இருந்தேன்'' - 'பிகில்' ஸ்டார் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 04, 2019 03:16 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம் பிகில். அட்லி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அப்பா - மகன் என தளபதி விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு விவேக் தளபதி விஜய்யுடன் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், மன அழுத்தமும், கவலையும் உங்களை வயதானவர்களாக காட்டும். நடந்தது எல்லாமே நடந்தது தான். அதனால் கவலைப்படாதீங்க சந்தோஷமா இருங்க. நான் 2015ல் இப்படி இருந்தேன் என்று தன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Dear folks! Stress n tension makes you age! Wt ever has to happen will happen! So don’t worry n b happy! I looked like this in 2015! pic.twitter.com/nilUg5wrs0
— Vivekh actor (@Actor_Vivek) November 4, 2019