2010ல் வந்த படத்தில் ஆழ் துளைக் கிணறு பற்றி, சொன்னேன். ஆனால் இன்று வரை.....! - விவேக் Tweet
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 28, 2019 01:24 PM
குழந்தை சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக தொடரும் நிலையில் பிரபலங்கள் பலரும் உருக்கமுடன் பிரார்த்தித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் வீட்டின் தோட்டத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தவறி விழுந்தான். அப்போது முதல் குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நவீன எந்திரங்கள் மூலம் பக்கத்தில் குழி தோண்டி சிறுவனை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால் குறுக்கே பாறைகள் இருப்பதால் எந்திரங்களே திணறி வருகின்றன. இந்நிலையில் எந்த சூழ்நிலையிலும் குழந்தையை மீட்கும் பணி கைவிடப்படாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையை எப்படியாவது மீட்டு வெளியே கொண்டு வந்து விட மாட்டார்களா என ஒட்டு மொத்த தமிழகமும் இரவு பகலாய் பிரார்த்தனை செய்து கொண்டிருகின்றது. மதபேதம் இன்றி அனைத்து தரப்பு மக்களும் சுஜித்துக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
நடிகர் விவேக் தனது டிவிட்டர் பதிவில், 2010ல் வந்த பலே பாண்டியா படத்தில் ஆழ் துளைக் கிணறு பற்றி, சொன்னேன். ஆனால் இன்று வரை அந்த மெத்தனம் அப்படியே இருப்பது மிக மிக வேதனையான அவலம் என தெரிவித்திருக்கிறார்
2010ல் வந்த பலே பாண்டியா படத்தில் ஆழ் துளைக் கிணறு பற்றி, சொன்னேன். ஆனால் இன்று வரை அந்த மெத்தனம் அப்படியே இருப்பது மிக மிக வேதனையான அவலம். 😭 https://t.co/byttXlaen1
— Vivekh actor (@Actor_Vivek) October 27, 2019