விஜய் சேதுபதியுடன் முதன்முறையாக கூட்டணி அமைக்கும் கலக்கல் காமெடி நடிகர்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 15, 2019 01:58 PM
விஜய் சேதுபதியின் 33வது படமான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார்.

சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்குகிறார்.
பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். நிவாஸ் கே பிரச்சன்னா இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இப்படத்திற்கு யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தளத்தில் விஜய்சேதுபதியுடன் விவேக் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியுடன் விவேக் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் இசை கலைஞராக நடிக்கிறார்.