விஜய், அஜித் ஸ்டைல ஃபாலோ பண்ணுங்க - சேரனுக்கு பிரபல நடிகர் அட்வைஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சேரன் முதன்மை வேடத்தில் நடித்து உருவாகியிருக்கும் படம் ''ராஜாவுக்கு செக்''. இந்த படத்துக்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்ய வினோத் எஜமான்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

Vivekh advised to Bigg Boss 3 Cheran for his twitter Post

இந்த படத்தில் இர்ஃபான், ஸ்ருஷ்டி டாங்கே நந்தனா வர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பல்லட்டே கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் ராஜ்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இணையத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் குறித்து சற்றுகாட்டமாக சேரன் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் நடிகர் விவேக், சேரன் சார்! நீங்கள் மிக சிறந்த சமுதாய நோக்கம் உள்ள தேசிய விருது பெற்ற படைப்பாளி. ஆகவே விஜய் சொல்வது போல் “ ignore negativity”. அஜீத் சொல்வது போல் “ let go”. நல்ல கருத்தினை பதிவிட்டு அமைதி, ஆனந்தமுடன் இருங்கள். Peace to all'' என்று குறிப்பிட்டுள்ளார்.