“உன்னை மீட்டு இப்போ துயரக்குழுயில் நாங்கள்...!” - சுர்ஜித்திற்காக வருந்திய நடிகர் விவேக்
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 29, 2019 11:05 AM
குழந்தை சுஜித் உயிரிழப்பு குறித்து திரை பிரபலங்கள் பலரும் தன் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சுஜித் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அன்று மாலை முதலே மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றன. ஆனால் குழந்தையை மீட்க மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சியும் பின்னடைவை சந்தித்தது. நவீன எந்திரங்கள் உதவியுடன் இரவு பகலாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் என அனைவரும் தூக்கமின்றி நான்கு நாட்களாய் குழந்தையை மீட்க போராடினர். ஆனால் நேற்றிரவு, குழந்தை சிக்கியிருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக மீட்பு குழுவினர் தெரிவித்ததாக அறிவித்தார் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்
இந்நிலையில் குழந்தை சுஜித்தின் மரணத்திற்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டிவிட்டரிலும் தங்களின் இரங்கலையும் வலியையும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
சுஜித் மரணம் குறித்து நடிகர் விவேக் பதிவிட்ட டிவிட்டில், கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு! சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது? என உருக்கமாக கேட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல் உள்ளங்களுக்கு!🙏🏼 சுர்ஜித், உன் உடலை எடுத்து விட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம்.எங்களை யார் எடுப்பது?😭
— Vivekh actor (@Actor_Vivek) October 29, 2019