கமல்ஹாசனுக்கு நடிகர் விவேக் அளித்த அன்பு பரிசு என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 11, 2019 02:38 PM
கமல்ஹாசனின் 65வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விவேக் அவருக்கு பிறந்த நாள் பரிசு ஒன்றை வழங்கியிருக்கிறார்.

கமல்ஹாசன் கடந்த 7 ஆம் தேதி தனது 65வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனது தந்தைக்கு சிலை திறந்தார் கமல்ஹாசன்.
இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் குடும்பத்தினரும் திரைத்துறையை சேர்ந்த நெருங்கிய நண்பர்களுடன் கலந்துகொண்டனர். அடுத்த நாளே சினிமாவில் தன்னுடைய தந்தை ஆசான் என்று கூறும் இயக்குநர் பாலச்சந்தருக்கு தான் புதிதாக திறந்த ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் சிலை வைத்தார்.
இந்நிலையில் நடிகர் விவேக், கமல்ஹாசனுக்கு தான் அதிகம் நேசிக்கும் அப்துல் கலாமின் அக்னி சிறகுகள் புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். இதுதொடர்பான போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விவேக், கலையுலக வானில் இருந்து...சமுதாய வாழ்வுக்கு.. சிறகு விரிக்கும் தங்களுக்கு இந்த அக்கினிச் சிறகுகள்.. என் அன்புப் பரிசு என குறிப்பிட்டுள்ளார்.
கலையுலக வானில் இருந்து...சமுதாய வாழ்வுக்கு .. சிறகு விரிக்கும் தங்களுக்கு இந்த அக்கினிச் சிறகுகள் ... என் அன்புப் பரிசு. @ikamalhaasan pic.twitter.com/Jqzs04rj03
— Vivekh actor (@Actor_Vivek) November 11, 2019