Nenjuku Needhi

மிஷ்கின் - விஜய் சேதுபதி சந்திப்பு.. காரணம் இது தான்! வெளிவந்த சூப்பர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மிஷ்கின் - விஜய் சேதுபதி சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Vijay Sethupathi completed his Dubbing for Mysskin Pisasu2

Also Read | பாண்டிச்சேரி கடற்கரையில் ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன்.. #SK20 படத்தின் வேறலெவல் அப்டேட்!

2016-ல் இயக்குனர் பாலா தயாரிப்பில், இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான பிசாசு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் திரைப்பட விமர்சகர்கள்  மத்தியில்  நல்ல விமர்சனங்களை பெற்றது.

பிசாசு முதலாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிக்கும் ‘பிசாசு 2’ திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்குகின்றார். இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவுற்று பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

Vijay Sethupathi completed his Dubbing for Mysskin Pisasu2

இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான "உறவின் பாட்டு" பாடல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2 ஆம் நாள் வெளியானது. படத்தின் டீசரும் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ஆடியோ உரிமையை சரிகம நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

Vijay Sethupathi completed his Dubbing for Mysskin Pisasu2

இந்நிலையில் விஜய் சேதுபதி, பிசாசு-2 படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி நிறைவு செய்துள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது. டப்பிங்கின் போது இயக்குனர் மிஷ்கின் உடன் விஜய் சேதுபதி எடுத்த புகைப்படமும் வெளியாகி உள்ளது. தெலுங்கில் பிசாசு-2 படம் பிசாசி-2 என்ற பெயரில் ரிலீசாக உள்ளது.

Vijay Sethupathi completed his Dubbing for Mysskin Pisasu2

Also Read | துல்கர் சல்மான் - ராஷ்மிகா - மிருணாள் நடிக்கும் புதிய ரொமாண்டிக் படம்.. ரிலீஸ் எப்போ? OFFICIAL UPDATE

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Sethupathi completed his Dubbing for Mysskin Pisasu2

People looking for online information on Mysskin, Pisasu2, Pisasu2 Movie Updates, Vijay Sethupathi will find this news story useful.