மாஸ் Stylish லுக்கில் விஜய் சேதுபதி… வைரலாகும் ‘விக்ரம்’ படத்தின் புதிய BTS புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் புதிய புகைப்படம் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.

Vijay sethupathi new BTS pic went viral

Also Read | அரவிந்த் சாமி & ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’… ரிலீஸ் தேதியுடன் வெளியான சென்சார் தகவல்- Viral Pic

விக்ரம் ரிலீஸ்….

கமல்ஹாசன் நடிப்பில்  உருவாகி வரும் ‘விக்ரம்’திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்காண்டு இடைவெளியில் கமலின் அடுத்த படமாக இந்த திரைப்படம் ரிலீஸாவதால் படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

Vijay sethupathi new BTS pic went viral

நட்சத்திரப் பட்டாளம்…

இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதற்கு, கமலுடன் பகத் ஃபாசில், விஜய் சேதுபதி போன்ற பிரபல நடிகர்களும் படத்தில் இருப்பதும் ஒரு காரணமாக அமைந்துள்ளன. மேலும் சூர்யாவும் கௌரவ வேடத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க ஆர்வமாக உள்ளனர். ஆனால் படத்தில் இதுவரை யார் எந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்ற தகவலைக் கூட பகிராமல படக்குழு ரகசியமாக வைத்திருந்தனர். படத்தலைப்பான ‘விக்ரம்’ கதாபாத்திரத்தில் கமல் நடிக்கிறாரா அல்லது டிரைலரில் இடம்பெறும் குழந்தையின் பெயரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

Vijay sethupathi new BTS pic went viral

விஜய் சேதுபதி BTS புகைப்படம்…

படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் பெயரைப் படக்குழு நேற்று வெளியிட்டது. விஜய் சேதுபதி ‘சந்தானம்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளியான போஸ்டர் கவனத்தை ஈர்த்தது. முன்னதாக பகத் ஃபாசில் ‘அமர்’ என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் புதிய BTS புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அந்த புகைபப்டத்தில் விஜய் சேதுபதியின் உடைகள் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவை ரெட்ரோ ஸ்டைலில் இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. முன்னதாக விஜய் சேதுபதியின் போஸ்டரும் பழைய விக்ரம் படத்தின் சத்யராஜ் கதாபாத்திரமும் அணிந்திருக்கும் கண்ணாடி ஒரே மாதிரியாக இருக்கும்படி வெளியானது இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

Vijay sethupathi new BTS pic went viral

Also Read |மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் ‘பகாசூரன்’… ரிலீஸ் எப்போது? லேட்டஸ்ட் தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay sethupathi new BTS pic went viral

People looking for online information on Vijay Sethupathi, Vijay sethupathi Latest Picutres will find this news story useful.