விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய PAN INDIA படம்.. ஜோடியான பிரபல சூப்பர் ஸ்டார் நடிகை! செம்ம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகன்நாத் இணையும் ஆக்சன் டிராமா  படமான ‘JGM’ படத்தில் பூஜா ஹெக்டே இணைந்துள்ளார்.

JGM SHOOT BEGINS POOJA HEGDE ON BOARD with Vijay Devarakonda

JGM திரைப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து  தயாரிக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்  பூரி ஜெகன்நாத். இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர் படம்,  இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

JGM SHOOT BEGINS POOJA HEGDE ON BOARD with Vijay Devarakonda

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஜூன் 4, 2022  மும்பையில் துவங்கி, உலகின் பல இடங்களில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடிக்க உள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

JGM SHOOT BEGINS POOJA HEGDE ON BOARD with Vijay Devarakonda

 பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கும் இந்த ஆக்‌ஷன் என்டர்டெய்னர், 3 ஆகஸ்ட் 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. JGM படம்  பூரி கனெக்ட் & ஸ்ரீகாரா ஸ்டுடியோ இணை தயாரிப்பு ஆகும்.

சார்மி கவுர், ஸ்ரீகாரா ஸ்டுடியோ தயாரிப்பாளர் வம்ஷி பைடிப்பள்ளி, ஸ்ரீகாரா ஸ்டுடியோவின் இயக்குனர் சிங்கராவ் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

 

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய PAN INDIA படம்.. ஜோடியான பிரபல சூப்பர் ஸ்டார் நடிகை! செம்ம அப்டேட் வீடியோ

JGM SHOOT BEGINS POOJA HEGDE ON BOARD with Vijay Devarakonda

People looking for online information on JGM, Pooja Hegde, Vijay Devarakonda will find this news story useful.