அரவிந்த் சாமி & ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’… ரிலீஸ் தேதியுடன் வெளியான சென்சார் தகவல்- Viral Pic

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ள ‘கள்ளபார்ட்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Aravind samy Kallapart movie release date announced

Also Read | மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் ‘பகாசூரன்’… ரிலீஸ் எப்போது? லேட்டஸ்ட் தகவல்

அரவிந்த்சாமி மறுவருகை…

90 களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நடிகர் அரவிந்த் சாமி ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி தொழிலதிபராக செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் இயக்குனர் மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அடுத்தடுத்து தனி ஒருவன், போகன், சதுரங்க வேட்டை 2, கள்ளபார்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Aravind samy Kallapart movie release date announced

கள்ளபார்ட்…

அரவிந்த்சாமி மற்றும் ரெஜினா நடித்துள்ள " கள்ளபார்ட் " படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது. என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு இயக்குனராக அரவிந்த் கிருஷ்ணா பணியாற்ற, இசையமைப்பாளராக நிவாஸ் K பிரசன்னாவும், எடிட்டராக S. இளையராஜாவும், கலை இயக்குனராக- மாயா பாண்டியும், ஸ்டண்ட் இயக்குனராக மிராக்கில் மைக்கேல்லும் பணியாற்றுகின்றனர். பாடல்களை கங்கை அமரன், சரஸ்வதி மேனன் ஆகியோர் எழுதி உள்ளனர்.  S.பார்த்தி, S.சீனா தயாரித்துள்ளனர்.

Aravind samy Kallapart movie release date announced

படம்  பற்றி இயக்குனர்…

இந்த படம் பற்றி இயக்குனர் ராஜபாண்டி "படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கள்ளபார்ட் என்பது பொருந்தும் அதனாலேயே படத்திற்கு கள்ளபார்ட் என்று பெயர் வைத்துள்ளோம். ஹைஸ்ட் திரில்லரில் நடக்கும் உணர்வு பூர்வமான ஒரு போராட்டம் தான் இந்த படத்தின்  திரைக்கதை. இதுவரை யாரும் தொடாத ஒரு கதை களத்தை இதில் பார்க்கலாம். படத்திற்காக பல லட்சம் ரூபாய் செலவில் நான்கு செட்டுகள் அமைக்கப்பட்டு மிகப்பிரம்மாண்டமாக படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம்.அந்த காட்சிகள் திரையில் பார்க்க பிரமிப்பாக இருக்கும். படம் நிச்சயம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும்." என்று தெரிவித்துள்ளார்.

Aravind samy Kallapart movie release date announced

பட ரிலீஸ்…

இந்த திரைப்படம் கடந்த மே மாதமே ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது ரிலீஸ் தேதி ஜூன் 24  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்துக்கு UA சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது சம்மந்தமான புதிய போஸ்டரைப் படக்குழ் வெளியிட இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read | ‘விக்ரம்’ படத்தில் சூர்யா கதாபாத்திரம் என்ன?… எதிர்பார்ப்பை எகிறவைத்த லோகேஷ்…. வைரல் Poster

தொடர்புடைய இணைப்புகள்

Aravind samy Kallapart movie release date announced

People looking for online information on Aravind samy, Kallapart Movie, Kallapart movie release Updates, Regina will find this news story useful.