"கண்டிப்பா வரணும்.." முதல்வருக்கு திருமண Invitation கொடுத்த விக்னேஷ், நயன்.. வைரலாகும் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை  நயன்தாரா ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், ஜூன் 09 ஆம் தேதியன்று, மகாபலிபுரத்தில் வைத்து திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

Vignesh shivan and nayanthara invites cm stalin for wedding

முன்னதாக, விக்னேஷ் சிவன் இயக்கி இருந்த "நானும் ரௌடி தான்" திரைப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோருக்கு இடையே காதல் உருவானதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் - நயன்

இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சுற்றித் திரியும் புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்வதை வழக்கமாக கொண்டு வந்தார் விக்னேஷ் சிவன். இதன் பின்னர், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்றும் தகவல் பரவி வந்தது. அதே போல, கடந்த ஏப்ரல் மாதம் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்த "காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்திலும், நயன்தாரா நடித்திருந்தார்.

Vignesh shivan and nayanthara invites cm stalin for wedding

ஜூன் 09 -இல் திருமணம்?

இதன் பின்னர், அவர்கள் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்பதும் உறுதியானது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன், விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம், ஜூன் 09 ஆம் தேதியன்று, மகாபலிபுரத்தில் வைத்து நடைபெறவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தது. மேலும், பல பிரபலங்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், தகவ்லல்கள் வெளியாகி வந்தது.

Vignesh shivan and nayanthara invites cm stalin for wedding

முதல்வருக்கு Invitation

இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, தங்களின் திருமண அழைப்பிதழ் கொடுத்த புகைப்படம், வெளியாகி உள்ளது. திருமண பத்திரிக்கையுடன், பூங்கொத்து கொடுத்து முதல்வரை அவர்கள் வரவேற்றுள்ளனர். அதே போல, நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்துள்ளார். இது தொடர்பான புகைப்படமும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh shivan and nayanthara invites cm stalin for wedding

People looking for online information on Marriage, MK Stalin, Nayanthara, Udhayanidhi Stalin, Vignesh shivan, Wedding Invitation will find this news story useful.