அட்லி - ஷாருக்கான் இணையும் புதிய படம்.. வெளியான மிரட்டல் 'தமிழ்' FIRST LOOK போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி (Atlee) இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Atlee Shahrukh Khan Jawan Movie First Look Poster

இப்படத்திற்கு 'ஜவான்' 'Jawan' என பெயரிடப்பட்டுள்ளது. தலையில் பலத்த காயத்துடன், முகச்சிதைவுக்கு உள்ளாகி ஷாருக்கான் காட்சியளிப்பது போன்று பச்சை வண்ண பின்னணியில் முதல் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. இந்த போஸ்டரை ராகுல் நந்தா வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கனவே வலிமை படத்தின் போஸ்டரை வடிவமைத்தவர்.

Atlee Shahrukh Khan Jawan Movie First Look Poster

இந்த ஜவான் படம் பான் இந்திய படமாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.  இந்த படத்தின் படப்பிடிப்பு புனேயில் தொடங்கி, மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷாருக்கானுக்கு (Shah Rukh Khan) ஜோடியாக நயன்தாரா (Nayanthara) நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை பிரியாமணி (Priyamani) ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.இந்த ஜவான் படம், ஜூன் 2, 2023 அன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

Atlee Shahrukh Khan Jawan Movie First Look Poster

இந்த ஜவான் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம் சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரிகான் தயாரிக்கிறார். 

தொடர்புடைய இணைப்புகள்

Atlee Shahrukh Khan Jawan Movie First Look Poster

People looking for online information on Anirudh, Atlee, Jawan, Nayanthara, Sharukh Khan will find this news story useful.