www.garudabazaar.com

பிரபல ஹீரோவின் பெயரில் மோசடி வேலை.. கண்டிப்பான Action எடுக்க முடிவு. நடந்தது என்ன தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹீரோ தனது பெயரை வைத்து நடைபெறும் மோசடி வேலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

விஜய் தேவரகொண்டா பெயரில் மோசடி | Actor Vijay Devarakonda opens on Fraud activities on his name

தெலுங்கு சினிமாவில் பிசியான ஹீரோவாக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இவர் தமிழிலும் பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து இவர் ரசிகர்களை கவர்ந்தார். 

விஜய் தேவரகொண்டா பெயரில் மோசடி | Actor Vijay Devarakonda opens on Fraud activities on his name

இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சில தயாரிப்பு நிறுவனங்கள், நான் அவர்களின் படத்தில் நடிப்பதாக பொய் சொல்லி, நடிகர்களின் தேர்வை நடத்தி வருவதாக அறிந்தேன். நான் எந்த படத்தில் நடிப்பதாக இருந்தாலும்,  அதை முறையே எனது சமூக வலைதளங்களில் அறிவிப்பேன். அப்படி போலியாக ஆடிஷன் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளோம். தயவு செய்து, இது போன்ற தவறான தகவல்களை அப்படியே நம்பாதீர்கள்'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

விஜய் தேவரகொண்டா பெயரில் மோசடி | Actor Vijay Devarakonda opens on Fraud activities on his name

People looking for online information on Fake Audition, Vijay Devarakonda will find this news story useful.