விஜய்க்கு ‘ஹாப்பி டே’ ராஷ்மிகாவின் ஸ்பெஷல் போஸ்ட், குவியும் காம்ரேடுகளின் வாழ்த்துக்கள்!
முகப்பு > சினிமா செய்திகள்உலகத்தில் கொரோனா பிரச்னைக்கு அடுத்ததாக சொல்லக் கூடிய அளவுக்கு nepotism என்ற வாரிசு அரசியல் உள்ளது. அரசியல் முதல் சினிமா வரை பிரபலங்கள் தங்களின் வாரிசுகளுக்கு சீட் போட்டு வைக்கும் நிலை பரவலாக உள்ளது. இதில் பெரும்பாலும் திறமையானவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க, என்னதான் வாரிசு அவதாரமாக இருந்தாலும் தோற்றுப் போனவர்கள் பலர் உண்டு.
டோலிவுட் என்று செல்லமாக அழைக்கப்படும் தெலுங்கு சினிமா உலகில் வாரிசு நடிகர்கள்தான் கோலோச்சுகின்றனர். அவர்களின் திறமை மட்டுமல்லாமல் ரசிகர்களின் அன்பும் அவர்களின் இடத்தை நிரந்தரப்படுத்தி உள்ளது. இதில் புதியதாக ஒருவர் உள்நுழைந்து வெற்றிகரமாக வலம் வருவது என்பதெல்லாம் பெரும் அதிசயம் என்ற நிலையை மாற்றியவர் விஜய் தேவரேகொண்டா. சினிமா பேக்ரவுண்ட் இல்லாத குடும்பத்திலிருந்து, தியேட்டரில் தன்னுடைய திறமையை கூர் திட்டி இன்று டோலிவுட் மட்டுமல்லாமல் கோலிவுட், பாலிவுட் என புகழில் உச்சத்தை தொட்டு வருகிறார். அவருடைய பிறந்த நாளான இன்று (மே 9) ரசிகர்களும் திரைத் துறை பிரபலங்களும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
சிறிய வேடத்தில் நடித்த “லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்” (Life is beautiful) என்ற படம் அவருக்கு அழகான ரெட் கார்ப்பெட்டை விரித்துத் தந்தது. அடுத்த படமான “எவடே சுப்ரமணியம்” (Evade Subramaniam) நல்ல நடிகராக அவரை அடையாளப்படுத்தியது. பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றமுடைய அவரை “பெல்லி சூப்புலு’’ (Pelli Choopulu) நல்ல நடிகராகவும், க்யூட் ஹீரோவாகவும் நிலைக்கச் செய்தது. அதன் பிறகு நடந்ததுதான் சரித்திரம். But, rowdy lover role in “அர்ஜுன் ரெட்டி”யில் (Arjun Reddy) அவர் ஏற்று நடித்திருந்த ரெளடித்தனமான காதலன் வேடம் அனைவரையும் கவர்ந்துவிட, அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இயக்குனர் சந்தீப் ரெட்டியின் எமோஷனல் லவ் ஸ்டோரியான “அர்ஜுன் ரெட்டி” தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழியிலும் ரீமேக் ஆனது. சென்ஷேனல் வெற்றிக்கு சொந்தக்காரராக விஜய் தேவரகொண்டா மாறினார். அதன் பின் தெலுங்கு திரையுலகில் மோஸ்ட் வாண்டட் நடிகராக விஜய்யின் இமேஜ் உயர்ந்தது. தெலுங்கு சினிமா ரசிகர்கள் அவர் போகும் இடங்களில் எல்லாம் தங்கள் அன்பைக் வெளிப்படுத்தி ரெளடி ஹீரோ என்று ஆரவாரம் செய்து வருகின்றனர்.
அதன் பின்னர் ராஷ்மிகா மந்தானாவுடன் விஜய் தேவரகொண்டா நடித்த “கீத கோவிந்தம்” படம் மீண்டும் ஹிட் அடித்தது. மெகாஸ்டார் சிரஞ்சீவி ஆடியோ விழாவில் விஜயை “உங்களை ஸ்டார் கிளப்புக்கு வரவேற்கிறோம்” என்று பாராட்டி அழைத்தார். Dear Comrade, World Famous Lover உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார்.
சமீபத்தில், கொரோனா பிரச்சனையால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு உதவ , middle-class foundation என்ற அமைப்பை உருவாக்கி அதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
தன் மனதில் தோன்றும் விஷயங்களை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பேசும் இயல்புடையவர் விஜய் தேவரகொண்டா. ஃபேக் நியூஸ் பரப்பும் ஊடகங்களை சாடுவதிலிருந்து, சக நடிகைக்கும் தனக்குமான உறவு வரை தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அனாயசமாக பதில் சொல்வார். கடந்த ஆண்டு கோவா ஃப்லிம் ஃபெஸ்டிவலில் அவருக்கு எதிராக நடிகை பார்வதி கூறிய விமர்சனத்தையும் பாசிட்டிவாகவாகவே எதிர்கொண்டார். அடுத்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வரும் ஃபைட்டர் என்ற படத்தில் அனன்யா பாண்டேயுடன் நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்பு நடந்துவரும் சமயத்தில்தான் லாக்டவுன் பிரச்ச்னை தொடங்கியது. தடைஉத்தரவு முடிந்தவுடன் இதன் ஷூட்டிங் தொடங்கும் என்று படத்தில் இயக்குனரும் தயாரிப்பாளருமான புரி ஜகன்நாத் தெரிவித்துள்ளார்.
கீத கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தானா ஜோடி தெலுங்கு திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடி ஆனார்கள். ராஷ்மிகா டிவிட்டரில் தன்னுடைய கோ ஸ்டார் மற்றும் நண்பரான விஜய்ய்க்கு பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்தார்.
பல ரசிகர்களின் மனதை கவர்ந்த ரெளடி ஹீரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
Happiest birthday to my comrade! 🐷 @TheDeverakonda aaaaaaaaaaa! 💃🏻✨ pic.twitter.com/NPbpl21fkE
— Rashmika Mandanna (@iamRashmika) May 9, 2020