மாஸ்க்குக்கு பதில் இதை பயன்படுத்துங்கள்.. ஒரு காரணம் இருக்கு.! பிரபல ஹீரோ விழிப்புணர்வு.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் அவசியமான விழிப்புணர்வை பகிர்ந்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இத்திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இதையடுத்து இவர் நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதுவும் ரசிகர்களை கவர்ந்தது. இவர் தற்போது ஃபைட்டர் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், 'அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன். வெறும் துணியால் கூட இந்த நோய் பரவுதலை தடுக்க முடியும். அதனால் மெடிக்கல் மாஸ்குகளை டாக்டர்களுக்கு விட்டுவிடுங்கள். அதற்கு பதிலாக கர்ச்சிப், ஸ்கார்ப் உள்ளிட்டவற்றை பயன்படுத்துங்கள்'' என அவர் தெரிவித்துள்ளார்.