ரகுமான் முதல் ஜிவி வரை... இசையமைப்பாளர்களுக்கு ஒரு இன்பர்மேஷன்.. சதீஷ் அட்ராசிட்டி !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நகைச்சுவை நடிகர் சதீஷ் ராஜவம்சம் படத்தில் பாடல் பாடும் ரிக்கார்டிங் ஸ்டில்லை வெளியிட்டுள்ளார்.

actor sathish posts an information for music directors

தமிழ்ப்படம் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சதீஷ். தனது நகைச்சுவைகளாலும் கவுன்டர்களாலும் ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து முன்னணி ஹீரோக்களான விஜய், தனுஷ் உள்ளிட்டோரின் படங்களில் சதீஷ் தனது காமெடியால் அதிரடி காட்டினார். மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்திலும் சதீஷ் நடித்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ராஜவம்சம் படத்தில் ஒரு பாடலை பாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சதீஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சதீஷ் பாடுவதை கேட்டு இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் தலையில் அடித்து கொள்வது போன்ற அப்புகைப்படத்தை பதிவிட்டு, for your information என்று ஏ.ஆர்.ரகுமான், ஜிவிபிரகாஷ், அனிருத், தமன், இமான், விஜய் ஆண்டனி, தேவிஶ்ரீபிரசாத், சியான் ரோல்டன் என அனைத்து இசையமைப்பாளர்களையும் டேக் செய்துள்ளார். அவரின் பதிவை பார்த்த விஜய் ஆண்டனியும் வெல்கம் சார் என பதிவிட்டுள்ளார். சதீஷின் நகைச்சுவையான இந்த பதிவை நெட்டிசன்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.

Entertainment sub editor