தளபதியின் 'மாஸ்டர்' குட்டி ஸ்டோரி சீக்ரெட் - ''அந்த லுக் படத்துல டிரேட் மார்க்கா இருக்கு''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படத்தில் இருந்து குட்டி ஸ்டோரி பாடல் நேற்று (பிப்ரவரி 14) வெளியாகி 24 மணி நேரத்தில் யூடியூபில் 8 மில்லியன் பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அருண்ராஜா காமராஜ் எழுதிய இந்த பாடலை விஜய் பாடியுள்ளார்.

Thalapathy Vijay, Anirudh, Vijay Sethupathi, Master Kutty Story Secret, Animation Team reveals

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளாத அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரித்து வருகிறார்.

குட்டி ஸ்டோரி பாடல் தளபதியின் சில ஸ்டில்ஸ்களை கொண்டு அனிமேஷன் வடிவில் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் இதனை உருவாக்கிய அனிமேஷன் டீம் சார்பாக சிவபிரசாத் வேலாயுதம் Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,  டைரக்ஷன் டீமிடம் இருந்து வந்த ஐடியா இது. பாடி லாங்குவேஜ் வச்சு பண்ணிடலாம். ஆனால் லுக்கை 3Dயில் மேட்ச் பண்றது ரொம்ப கஷ்டம்.

விஜய் கண்ணாடி போட்டு இருந்தாரு. ஹேர்ஸ் ஸ்டைல் யூனிக்கா இருந்தது. கண்ணாடி, ஹேர் ஸ்டைல், தாடி உள்ளிட்டவை எங்களுக்கு ஈஸியா இருந்தது. படத்துலயே அந்த டிரேட் மார்க் இருந்தது. அதனால எங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.

இதுகுறித்து லோகேஷ் என்கிட்ட பேசவே இல்ல. காரணம் அவரோட டீம்ல எல்லாருக்குமே எல்லாம் தெரிஞ்சிருக்கும். லோகேஷ் நல்லா Organizer. நாங்களும் அந்த டீமா தான் நெனச்சுக்குறோம். மாநகரம் படத்துல இருந்து எங்களுக்கு நல்ல சிங்க் இருக்கு. அவருக்கு என்ன வேணும்னு கிளியரா தெரியும்.

யூத் எலிமென்ட்ஸ் பண்ணலாம்னு பேசியிருந்தோம். காலேஜில் இருப்பது குறித்து பேசினோம். அப்போ செல்ஃபி எடுக்குறது வைக்கலாம். யூத் கூட கனெக்டாகுற மாதிரி இருக்கும்னு பேசுனோம். ஆனா அந்த நேரத்துல விஜய்யோட மாஸ் செல்ஃபி வந்தது. அது தானா அமைந்தது. அதனை பயன்படுத்திக்கொண்டோம்'' என்றார்.

தளபதியின் 'மாஸ்டர்' குட்டி ஸ்டோரி சீக்ரெட் - ''அந்த லுக் படத்துல டிரேட் மார்க்கா இருக்கு'' வீடியோ

Entertainment sub editor