'மாஸ்டர்' விஜய்யின் குட்டி ஸ்டோரி உலக சாதனை - சந்தோஷத்தில் அனிருத் சொன்ன குட்டி மெசேஜ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாஸ்டர்' படத்தில் இருந்து தளபதி விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் வெளியான பாடல் 24 மணி நேரத்தில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். 

Thalapathy Vijay, Anirudh, Lokesh Kanagaraj, Vijay Sethupathi Master Kutty Story number 3 on the international music charts

இந்நிலையில் இந்த பாடல் குறித்து தற்போது அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இப்போ இது ஸ்பெஷல்... ஒரே நாளில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. சர்வதேச அளவிலான மியூசிக் சார்ட்டில் 3 ஆம் இடம் பிடித்துள்ளது. குட்டி ஸ்டோரி உலக கலக்கிக் கொண்டிருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் மற்றும் விஜய் சேதுபதி சம்பந்தபட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

Entertainment sub editor