கதை சொல்ல தயாராகும் கமல்... இது ஆண்டவரின் டிஜிட்டல் அவதாரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கமல் கன்டென்ட்கள் உருவாக்கும் இரு நிறுவனங்களுடன் சேர்ந்து பயணிக்கவுள்ளார்.

kamal to create regional content with banijay asia for digital

தமிழ்சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் கமல். 5 வயதில் நடிக்க ஆரம்பித்த இவர், தற்போது இந்தியன் 2 வில் நடித்து கொண்டு, தன்னை எப்போதுமே பிசியாக வைத்து கொண்டிருக்கிறார். நடிப்பதை தாண்டி, தமிழ்சினிமாவின் தரத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சிகளை கமல் எப்போதுமே எடுத்து வந்தார். ஹேராம், ஆளவந்தான், தசாவதாரம், விஸ்வரூபம் என தனது படங்களில் ஹாலிவுட் தரத்திலான மேக்கிங்கை கமல் தமிழ்சினிமாவில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் டிஜிட்டல் ப்ளாட்ஃபார்மில் கன்டென்ட்களை உருவாக்கி வரும் இரண்டு நிறுவனங்களுடன் கமல் இணைந்து பணியாற்றவுள்ளார். பனிஜெய் ஏசியா மற்றும் டர்மெரிக் மீடியா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் சேர்ந்து, பிராந்திய மொழிகளுக்கேற்ப கன்டென்களை உருவாக்கவிருப்பதாக கமல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த தனது பதிவில், 'கதை சொல்ல எப்போதுமே ஆர்வம் கொண்ட எனக்கு, இதன் மூலம் இன்னும் பெரிய கதைகளை பெரிய அளவிலான பார்வையாளர்களுக்கு கொண்டு செல்ல முடியும் என நம்புகிறேன என்று அவர் கூறியுள்ளார்.

Entertainment sub editor